நாஞ்சில்நாடன் சிறப்பிதழ்

Download as PDF e-book format

nanjil_nadan_spl_issue

நிலவை, சூரியனை, மழையை போற்றியபடி சிலம்பின் கதையை சொல்லத் தொடங்கும் இளங்கோவடிகள், பூம்புகார் ஊரைப் பற்றி சொல்ல தொடங்கும்போது, ‘ஒடுக்கம் கூறார் உயற்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே’ என்கிறார். கேட்பவனவற்றையெல்லாம் கேட்டு முழுவதும் உணர்ந்த பெரியவர்கள் இருக்கும் ஊர் என்பதிலும் ஒரு பெருமை இருக்கிறது. தொப்புள்கொடி உறவு போல நமக்கும் நம்முடைய சொந்த ஊருக்கும் உள்ள பிணைப்பு அறுந்து அறுபடாமலும் எப்படியோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய நிலத்தில் வாழ்பவர் யாரும் பசியாலோ, பகையாலோ தன்னைவிட்டு அகலாமல் பார்த்துக் கொள்கின்ற ஊர்கள் இப்போதும் இருக்கின்றனவா?

பிழைப்பிற்காக பையைத் தூக்கிக் கொண்டு பாம்பே போன ஜி சுப்ரமணியம் கூடவே நாஞ்சில் நாட்டை தன்னோடு எடுத்து சென்று விடுகிறார். அயல் மண்ணில், தனிமையைப் போக்கிக் கொள்ளும் வடிகாலாக எழுத்து பயணத்தை தொடங்கியவர், இந்த நாற்பதாண்டுகால பயணத்தில் தன்னுடைய தனிமைக்கனவுகளை மாபெரும் படைப்புலகமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களை பலவருடங்களாக பாடமாக தொடர்ந்து பயின்றவர், அந்த அகண்ட பிரவாகமான மரபிலக்கியங்களை, வட்டார மொழி இலக்கியத்தோடு இயைந்து இலக்கிய படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தன்னுடைய வாழ்நிலத்தை முன்வைத்து முப்பதுக்கும் குறையாத புத்தகங்களை பல்வேறு தளங்களில் எழுதி குவித்தவர் இன்னமும் குன்றாத படைப்பூக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

உலகத்து சுவையெல்லாம் தன் நாவில் ஊறித் ததும்பிக் கடைவாயில் வழிகிறது என்று சலம்பித்திரியும் சுண்டெலியாக தான் இருந்தாலும், முயல் வேட்டைக்கு பதிலாக யானை பிழைத்த வேல் ஏந்தல் எமக்கு இனியது என்கிறார். இந்த இறுமாப்பு என்றும் அவருடைய அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது.

இத்தகையை முழுவதும் உணர்ந்த பெரியோர்களை போற்றும் நோக்கத்துடன் பதாகை நாஞ்சில் நாடனின் படைப்புலகிற்கான சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறது.

தன் சுகவீனத்தையும் பொருட்படுத்தாது சிறப்பு கட்டுரை வழங்கிய எழுத்தாளர் அம்பை அவர்களுக்கும், தன் சகோதரியின் மருத்துவ சிகிச்சைகளுக்கிடையே நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் அ முத்துலிங்கத்திற்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.

நாஞ்சில் நாடனின் படைப்புலகைப் பற்றி எழுதுவது எமது கடமை என்று போற்றுதலுடன் படைப்புகளை கொடுத்த எழுத்தாளர் தமிழ்மகனுக்கும், கவிஞர் ராஜ சுந்தரராஜனுக்கும் இனிய நன்றி.

இந்த காலாண்டிதழ் வெகு சிறப்புடன் மூத்த எழுத்தாளருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பங்காற்றிய அத்தனை நண்பர்களுக்கும் பதாகை தனது அளப்பரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து சிறப்பானதொரு நேர்காணலை தொகுத்து வழங்கிய நண்பர்கள் த. கண்ணன், வெ. சுரேஷ், அன்பழகன் மற்றும் செந்திலுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்:

nanjil_interview_2கற்பனவும் இனி அமையும் (நாஞ்சில் நாடனுனான நேர்காணல்) ambai_nanjil_spl_issueநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்
(அம்பை)
amuthulingam (2)ராஜவீதி
(அ முத்துலிங்கம்)
tamilmagan‘குரு’ முனி
(தமிழ்மகன்)
nanjil_nadan_spl_issueமைசூரில் கும்பமுனி
(சோழக்கொண்டல்)
nanjil_nadan_spl_issueநாஞ்சிலின் நறும்புனல்
(சுநீல் கிருஷ்ணன்)
nanjil_nadan_spl_issueநகுமிளகாய்
(ராஜ சுந்தரராஜன்)
nanjil_nadan_spl_issueகம்பன் காதலன் (செந்தில்நாதன்)
nanjil_nadan_spl_issueசதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம்
(சுரேஷ் கண்ணன்)
nanjil_nadan_spl_issueநாஞ்சில்நாடன் படைப்புகளில் மொழிக்கூறு (சிவானந்தம் நீலகண்டன்)
nanjil_nadan_spl_issueநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்
(குமரன் கிருஷ்ணன்)
nanjil_nadan_spl_issueகையளவு கடல்நீர்
(திருமூர்த்தி ரங்கநாதன்)
nanjil_nadan_spl_issueவல் விருந்து
(வாசு பாலாஜி)
nanjil_nadan_spl_issueநாஞ்சிலும் நானும்
(சுல்தான்)

இந்த காலாண்டிதழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாப்லோ நெரூதாவின் இரண்டு கவிதைகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டு வருகிறோம். வெ நடராஜனின் மொழியாக்கத்தில் வெங்காயமே! வாழ்க நீ எம்மான்!. மற்றும் செந்தில்நாதனின் மொழியாக்கத்தில் ‘தக்காளி போற்றுதும்’.

வண்ணக்கழுத்தின் சாகச பயிற்சிகள் மாயக்கூத்தனின் மொழியாக்கத்தில் இவ்வாரமும் தொடர்கிறது. எஸ் சுரேஷின் ‘பாகேஸ்ரீ’ இந்துஸ்தானி இசை பின்புலத்தில் அருமையான சிறுகதையாக அமைந்திருக்கிறது.

எனக்கு ஒரு மாதிரி என்ன நடக்க போகிறது என்று புரிந்துவிட்டது. உடனே எனக்கு வெளியே ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. “மை நஹி ஆத்தும்” என்று சொல்லிவிட்டு வெளியே போக பார்த்தேன். அப்பா என் கையை பிடித்து நிறுத்தினார். “கஹான் ஜாரா. அந்தர் சல்” என்றார். நான் மெதுவாக பெரியப்பா படுத்திருந்த அறைக்குள் சென்றேன்.

அனுகிரஹாவின் ‘கண்ணாடி மனிதன்’, காஸ்மிக் தூசியின் வரைபடம் அல்லது சதுரங்க கட்டம், ரியாஸ் குரானாவின் ‘ஒரு பக்க இரவு‘ மற்றும் ஆதவன் கிருஷ்ணாவின் ‘பிரிதல்‘ கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

பதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.