தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா

தமிழில்: செந்தில்நாதன்

செந்தில்நாதன் தமிழாக்க கவிதை புகைப்படம்

சாலையெங்கும்
தக்காளிகள்,
கோடை,
மதியம்,
வெயில்
தக்காளியின்
இரண்டு
கோளங்களாய்ப்
பிளந்து
சாலையில்
சாறாய்
வழிந்தோடுகிறது.
டிசம்பரில்
காட்டுத்தீயாய்ப் பரவும்
தக்காளி
அடுப்பங்கரைகள் மீது
படையெடுத்து,
மதிய உணவில் ஊடுருவி,
மர அலமாரிகளில்
கண்ணாடிக்கோப்பைகள்,
வெண்ணெய்க் கிண்ணிகள்,
நீலநிற உப்புச் சாடிகள் நடுவே,
அமைதியாய்
அமர்கிறது.
அதற்கென்று
தனித்துவமான ஒளியும்,
அணைத்துச் செல்லும் அதிகாரமும் உண்டு.
துரதிர்ஷ்டவசமாக நாம் அதைக்
கொல்ல வேண்டும்:
அதன் உயிர்ச் சதைக்குள்
கத்தியைச்
செருக வேண்டும்,
செந்நிற
இதயம் அது,
நித்தம் புதிதாய்ப் பிறக்கும்
சூரியன்,
செறிவாக,
துவண்டு போகாது,
சிலே நாட்டின்
சாலடுகளில்,
படிகம் போன்ற வெங்காயத்தை
மகிழ்ச்சியாய் மணமுடிக்கும்.
அதைக் கொண்டாட
ஆலிவ் பழத்தின்
ஆதாரமான
எண்ணெய்,
அரைக் கோளங்களின்
மீது
தன்னையே ஊற்றிக்கொள்கிறது,
குறுமிளகுகள்
நறுமணத்தைச்
சேர்க்கின்றன,
உப்பு தன் ஈர்ப்பை;
இது ஒரு நளினமான
திருமணம்,
பார்ஸ்லி
சிறு பதாகைகளை
உயர்த்துகிறது,
உருளைக்கிழங்குகள்
துடிப்போடு கொதிக்கின்றன,
அந்த வறுவல்
வாசம்
கதவைத்
தட்டி,
நேரமாயிற்று!
வா! என்றழைக்கிறது.
மேசைக்குப்
போனால்
உச்சிக் கோடையில்
தக்காளி,
உலக நாயகன்,
மீண்டும்மீண்டும்
தோன்றி
வளமூட்டும் நட்சத்திரம்,
தன் வளைவுகளை,
தன் நாளங்களை,
புகழ்பெற்ற தன் முழுமையை,
வனப்பை,
நமக்குக் காட்டி,
விதையில்லாமல்
தொலியில்லாமல்
செதிலோ, தண்டோ இல்லாமல்
தன் செந்தீ வண்ண
யெளவனம் முழுவதையும்
கொடையாய்த்
தாரை வார்க்கிறது.

Ode to Tomatoes – Pablo Neruda

A.S.Kline ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டது
புகைப்படம் Anoosrini – Instagram

8 comments

 1. Aaah good one … seeing Pablo Neruda and Thakkaali in a single line made me suddenly realize why Thakkaali has a Kaali in it, and ofcourse Pablo confirms it in such varying fun ways …. I tried to imagine reading it from his table at his little home in Chile – Valparaiso … I sort of knew him only tiny bit then … fabulous location and house though … small, with a kitchen … Crazy realizing the Kaali of thakkali and reading it in a spatial context of a simple kitchen of a great mind! Went on to google searching for the English version – perhaps I should look for the Spanish version and read it … Aaah and I found it … Reminded me again how the word for street in Spanish is “Calle” though pronounced as Caye 🙂 … But the vital translation point that I can show you that you may enjoy is that sun is called “sol” which can be interpreted as soul too … un sol fresco,profundo, – can be a sun that rises fresh everyday strongly or can be the soul that is fresh/alive and profound/deep! … for me still the best part is discovering “the kaali in thekaali” 🙂 its after that I thought if the “mato” in “tomato” is that mata kaali too! 🙂 Thanks for that. Have been lazy to read on my own – this is a great own to discover at your site …

  1. அன்பு கே, தமிழில் பதிலளிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்- எனக்கு ஆங்கில அநுபூதி பத்தாது.

   sol என்ற சொல்லை தக்காளியுடன் தொடர்புபடுத்தி இந்தக் கவிதைக்கு ஒரு macabre முகம் கொடுத்து விட்டீர்கள். தனக்கு சூரிய அரசன் (le Roi Soleil) என்று பட்டம் சூட்டிக் கொண்ட பதினான்காம் லூயியின் நினைவுகள் தவிர்க்க முடியாமல் நினைவடுக்குகளின் அடியாழத்தில் இருந்து கொந்தளித்துக் கிளம்பி புறப்பட்டு வந்து விட்டன- பாரிஸ் நகர தெருக்களில் கரைபுரண்டு ஓடிய அந்த ரத்த ஆறு நாம் நினைத்தால் மறக்கக்கூடியதா என்ன?

   தக்காளியில் காளி இருப்பதைக் கவனித்த நீங்கள் வெங்காயத்தில் காயம் இருப்பதை தவற விட்டிருக்க முடியாது+ காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று பாடிய சித்தர் வாக்கின் உள்ளங்கை நெல்லிக்கை உருவகமாய் வெங்காயம் இருப்பதை என்னவென்று சொல்ல!

   தோழர் நெருதா தங்கள் தோழர் என்றறிய மகிழ்ச்சி- அனுபவங்களைப் பதிவு செய்தாயிற்ற்ரா?

   1. Aaah didnt know about the Loius part of the french history. Yes kitchen words vengaayam, perungkaayam, I had liked before! Ah and Neruda, no not my friend, I realize I had written it wrongly, what I meant is I visited his house – like a museum visit by a random traveler, when I was in Santiago on a conference meeting – Valparaiso is very close to Santiago … Reminds me I realized the double take of ven+dhayam and seer+aham only last year in this
    வெங்காயம் சுக்கானால்
    வெந்தயத்தால் ஆவதென்ன
    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
    மங்காத சீரகத்தை தந்தீரேல்
    வேண்டேன் பெருங்காயம்
    வேரகத்து செட்டியாரே.

 2. நெருடாவின் சமையலறையில் தடம் பதித்தவர் தன் மொழிபெயர்ப்பை வாசித்து பின்னூட்டமிட்டது நண்பர் செந்தில்நாதனுக்கு மகிழ்ச்சியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெருடாவின் சமையலறையை போட்டோ பிடித்திருந்தால் பதாகை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

  நிற்க. நாம் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவ வெங்காயமல்ல, மதச்சார்பற்ற வெங்காயம் என்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

  நிற்க.சாந்தியாகோவில் கான்பரன்ஸ் என்றால், அந்நிய நிதியுதவி பெறும் நச்சுசக்தியோடு பேசிக்கொண்டிருக்கிறேனோ என்று அச்சமாக இருக்கிறது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே?

  1. அந்நிய? Why? why under Pablo’s shadow? யாதும் ஊரே யாவரும் கேளிர் – அன்பே உலக தத்துவம். நிதி? Money is neutral – it is a paper with empty promise, like a prayer – it does make magic of its own kind. Having said that, I have a thousand and one reasons I can give you to judge me unfavorably – definitely not a saint. Mere mortal. So you have a right to your opinion! 🙂

   1. விளையாட்டுக்குச் சொன்னேன், தப்பா நினைச்சுக்காதீங்க 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.