தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த அகக் காட்சிகளின் துல்லிய வெளிப்பாடே பாவண்ணனின் படைப்புலகம். உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவருடைய பாணி. நாட்டார்கதை, புராணம், தொன்மம் என அவர் மனம் தொடும் எல்லையெல்லாம் சென்று புதிய கதைகளை உருவாக்குகிறார். பல தலைமுறைகளை சேர்ந்த, பல்வேறு கலாச்சார பின்னணிகள் கொண்ட, பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒரு சில கணங்களாவது வாழ்ந்து பார்த்தவரின் அனுபவ சேகரிப்புகள். அவருடைய சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கும் குதிரைவீரன் பயணம்’ இது. அந்த வீரனுக்கு சிறு வணக்கம் சொல்லும் விதமாக ரா. கிரிதரனின் ஆசிரியத்துவத்தில் இந்த சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது.
பொறுப்பாசிரியர் குறிப்பு – ரா. கிரிதரன்
குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]
பதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.