பதாகை 5-அக்-2015

கிண்டில், மொபைல் போன்ற கையடக்கக் கருவிகளில் வாசிக்க பிடிஎப்-
.2015 oct first

பதாகை சிறுகதை போட்டி 2015ல் முதல் பரிசு பெற்ற இரு சிறுகதைகளும் இந்த இதழில் பதிப்பிக்கப்படுகின்றன.

மாசாவின் கரங்கள்- தனா

யுக சந்தி?- முகம்மது ஐஷ்வர்யன்

இருவருக்கும் வாழ்த்துகள்.

போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கும் நடுவர்களாய் செயல்பட்ட திரு பாவண்ணன் மற்றும் திரு க. மோகனரங்கன் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

ஆனால் எல்லாரையும்விட நம் நன்றிக்கு உரியவர்கள் பதாகையில் தொடர்ந்து எழுதி அதன் இருப்பைச் சாத்தியப்படுத்துபவர்கள்தான்- அந்த வகையில் இவர்களுக்கு எல்லாம் நன்றிகள் என்று ஒரு நீண்ட பட்டியல் இடலாம். அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில், இந்த இதழில் எழுதியிருக்கும்  இவர்கள் இருவரும் வாழ்த்துக்கல்ல, பதாகையின் வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே – காஸ்மிக் தூசி

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு” – ஆர் அஜய்

பதாகை என்ன செய்தது என்ற கேள்வி எழ வேண்டுமென்றால், ,யார் பதாகையைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு நாம் காணக்கூடிய விடை முக்கியமாகிறது. இவ்விதழில் எழுதும் காஸ்மிக் தூசி மற்றும் ஆர் அஜய் வழியே,  பதாகையில் தொடர்ந்து எழுதி வரும் ஒவ்வொருவருக்கும் பதாகையின் வணக்கங்கள். இவர்கள் அனைவரும் மிக முக்கியமானவர்கள்.

தொடர்பு கொள்ள-

Advertisements