புகைப்படத் தேர்வு: அஜய் ஆர்.
Audio credit: ubuweb
புகைப்படத் தேர்வு: அஜய் ஆர்.
Audio credit: ubuweb
தென் அமெரிக்காவை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஒரு கட்டத்தில் சர்வ வல்லமையுடன் இருந்த ( ‘The Liberator’ என்றழைக்கப்பட்ட) சீமோன் பொலிவர் (Simon Bolivar), தன் தூக்கம், உணவு, பாதுகாப்பு குறித்து அசட்டையாக இருந்ததை,
“… his disinterest was not lack of awareness or fatalism, but rather the melancholic certainty that he would die in his bed, poor and naked and without the consolation of public gratitude.”
என்று ‘மார்கேஸ்’ (Gabriel Garcia Marquez) தன்னுடைய ‘The General in His Labyrinth’ நாவலில் குறிப்பிடுகிறார். நாவலின் முடிவில் கிட்டத்தட்ட அப்படியே நடக்கவும் செய்கிறது.
வரலாற்றிலும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று பதவியில் இருக்கும்போது கொல்லப்படுவதாகவோ அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டு அல்லது புகழின் வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, தங்கள் இறுதி காலத்தை அநாமதேயமாகக் கழிப்பதாகவோ உள்ளது. வெகு சிலரே இறுதிவரை பதவியையும், அதிகாரத்தையும் தம்மிடம் தக்க வைத்திருந்துள்ளனர். (more…)
தினசரி செய்திகள், சொந்தங்கள்/ தெரிந்தவர்களின் அனுபவங்கள் மூலம் காவல்துறை பற்றி தெரியவருவதில் அந்தத் துறை குறித்து எதிர்மறையான கருத்துக்களே அதிகம் மக்களிடம் உள்ளன. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பற்றி திரைப்படங்கள், பல சாகச குற்றப்புனைவுகள் பொதுவாக அளிக்கும் பிம்பம், அவர்கள் எப்போதும் நீதியின்பால் நிற்பவர்கள், அதற்காக எதையும்/ யாரையும் எதிர்ப்பவர்கள், சாகசங்கள் புரிபவர்கள் என்பதாகும். இந்த ஒற்றைத் தன்மையிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை மான்கெல் (Mankell) போன்றோர் தங்கள் குற்றப்புனைவுகளில் தந்திருக்கிறார்கள். ‘Ardh Sathya’ போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. பொது இலக்கியத்தில், குறிப்பாக இடதுசாரி ஆக்கங்களில் வழிபாட்டுத் தன்மையற்ற சித்தரிப்புக்களைக் காண்கிறோம். இவற்றில் வெளிப்படும் காவல்துறை அமைப்பின் கோர முகம் அச்சுறுத்துவதாக உள்ளது- காவல்துறையினர் அரசு எந்திரத்தால் மனிதத்தன்மை அகற்றப்பட்டு (dehumanized), அவர்களே எந்திரங்களாக உள்ளனர். (more…)
“Ages fourteen to eighteen, a girl needs something to kill all that time, that endless itchy waiting, every hour, every day for something—anything—to begin.”
“There’s something dangerous about the boredom of teenage girls.”
மேகன் ஆபட்டின் (Megan Abbot) ‘Dare Me’ நாவலில் பதின்பருவத்தைப் பற்றி வரும் வரிகள் இவை. அந்தப் பருவத்தின் சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பு, பாலின குழப்பம், எதையும் (குறிப்பாக, தடை செய்யப்பட்டுள்ளதை) முயற்சி செய்ய/ அறியும் விழைவு, நட்பு வட்டாரத்தால் எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் (peer pressure), வாழ்வின் யதார்த்தங்கள் அறிந்திராத காலத்தில் முடிவற்று நீளும் எனத் தோன்றும் இளமை என பலதரப்பட்டவை. சுயத்தை அறியவும் உறுதி செய்யவும் நாம் நம்மையறியாமல் செய்பவைகளாக இவற்றைக் கொள்ளலாம். அப்படி ‘தன்னையறிதலை’ மையமாக வைத்து, குற்றப்புனைவின் களத்தில் மேகன் ஆபட் இந்த நாவலை எழுதி உள்ளார். (more…)
திரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் வெளிவருவது போல எழுத்து/ பதிப்புத்துறையிலும் ‘read-alikes’ என்றழைக்கப்படும் புத்தகங்கள் உண்டு. உதாரணமாக சமீபத்தில் ‘Amish Tripathi’யின் ‘Shiva Trilogy’ நாவல்களின் வெற்றிக்குப் பிறகு அதே போல் நம் புராணங்கள்/இதிகாசங்கள் சார்ந்து, அவைஅவற்றில் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தைக் கதைக்களனாய் கொண்டு எழுதப்படும் நாவல்கள் அதிகம் இந்திய ஆங்கிலத்தில் வெளிவருகின்றன (இந்திய vernacular பொது இலக்கியத்தில் இப்படி புராணங்களை/இதிகாசங்களை மறுஉருவாக்கம் செய்வது எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும் இப்போது இந்திய ஆங்கிலத்தில் வருபவை ஒரு புதிய ழானராகவே மாறி உள்ளன).
டான் ப்ரௌனின் ‘டா வின்சி கோட்’ நாவலின் வெற்றிக்குக் பிறகு அதுபோலவே பல நாவல்கள் வெளிவந்து, அவை ‘ancient conspiracy theory’ நாவல்கள் என்றும் வகைபடுத்தப்பட்டு ஒரு குடிசைத் தொழில் போலவே ஆயின. இந்த வகை நாவல்கள் முன்பே வந்து கொண்டிருந்தன என்றாலும் ப்ரௌனின் வெற்றிக்குப் பிறகே அதிகமாக கவனத்துக்கு வந்தன (ப்ரௌனின் pet theoryஆன ‘Illuminati குறித்து ‘The Illuminatus! Trilogy’ எழுபதுகளில் வெளிவந்தன. Ecoவின் இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாத ‘Foucault’s Pendulum’ நாவலில் conspiracy theoryக்கள் பகடி செய்யப் படுகின்றன). (more…)