சுபலட்சுமி

கீதாஞ்சலி – ரபிந்த்ரநாத் தாகூர்

மொழிபெயர்ப்பு – சுபலட்சுமி

இந்த
வெற்றுப் பாத்திரத்தை
மீண்டும் மீண்டும்
காலி செய்து
பின்
புதிய உயிரால்
நிரப்பி என்னை
நிலையுள்ளவனாய்
செய்வதில் தான்
உனது ஆனந்தமே
இந்தச் சிறிய
புல்லாங்குழலை
மேடு பள்ளங்களில்
தூக்கிச் சென்று
மேலான புதிய
ராகங்களைப்
புலரச் செய்கிறாய்
உனது
இறவா தொடுதலில்
எனது இதயம்
இறுமாப்படைகிறது
அழியா
வார்த்தைகள்
அகத்தினுள்ளே
எனது சிறிய கைகள்
முடிவில்லாத பரிசுகளை
வாங்கிக்
கொண்டேயிருக்கின்றன
காலங்கள் கடப்பினும்
கருணை மழை
பொழிய பொழிய
இன்னும்
இடமிருக்கிறது
இருதயத்தில்…