
எண்ணற்ற நேர்க்கோடுகள்
எப்போதுமே குவிகின்றன
பழகிப்போன அறையின்
மூலையில்.
கனவின் கரையில்
நனவின் நினைவென
நிலைத்து நிற்கிறது
அந்த நத்தை.
கலையின் வலையில்
நத்தையின் நிழலை
அறையின் மூலையில்
நிறுத்த நினைக்கையில்,
நேர்கோட்டு ஏணியில்
விதியின் பழக்கத்தோடு
மூலையிலிருந்து முந்துகிறது
நத்தையின் கனவு:
காலத்தின் கரையில்
மரணத்தின் நனவாய்
நிழலாகி நிற்கிறேன்
நான்.
கரையைக் கடந்து
அலையில் அமிழ்ந்தால்
கனவும் நனவாகும்
வார்த்தைகளின் வானத்தில்,
குளிசங்கின் வளைவுகளில்
மரணத்தை நத்தையாக்கி
மூலைகளில்லா பெருவெளியாய்
விரியுமா என் கவிதை ?
000
ஒளிப்பட உதவி – Lightwave