வாசவதத்தை

வாசவதத்தை – 3

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்

சூன்யத்தின் இசை

பெருமுற்றம் திறக்கப்பட்டு பொதுமக்கள் எல்லாரும் உள்ளே வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். கௌமுதி உற்சவம் நடக்கும்போது ராஜகிருகம் முழுவதும் மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டே இருக்கும்.

‘அமாத்யர் வருவதாக எதிர்பார்த்திருந்ந்தோம்’

வேகசர்மனை வரவேற்றபடிக்கு விஷ்ணுகுப்தர் சொல்கிறார். அதிகாரமையத்தின் ஆணிவேர் அமைச்சகத்தின் தலைமையிடத்தில்தான் இருக்கிறது என்பது அவருடைய பாடங்களில் ஒன்று.

கனமான கருத்த சரீரத்தின் மேல் போர்த்திய பட்டு சீலையுடனும், முத்துச்சரங்கள் தைத்த சரிகை பாகை பறைசாற்றும் அதிகாரதோரணையோடும், சபாமண்டபத்தில் நுழைந்த வேகசர்மன், விஷ்ணுகுப்தரின் முகமனுக்கு சிரந்தாழ்த்தி பதில் முகமன் செய்துவிட்டு, சூரசேன வம்சத்தின் பராக்கிரமங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துகளைக் கூறி மகதத்தின் அரசவைக்கு வந்தனம் கூறுகிறான். யவனர்களை புறம்காட்டிய பர்வதவர்த்தனின் புகழ் பெருமதிப்புடன் எட்டுதிக்கும் பரவியிருந்தது. அவன் பின்னால் அணிவகுத்து நின்ற தூதுக்குழுவின் முகப்பில் பாசரின் வர்ணனைகள் மெய்யாகி வந்து நின்றது போல் இருக்கிறாள் வாசவதத்தை. அதுவரை அபிநயத்தில் லயித்திருந்த சபை நடுவே, புத்துருக் கொண்டு காப்பியத்திலிருந்து கிளம்பி வந்தது போல் நின்றிருக்கிறாள். (more…)

வாசவதத்தை – 2

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)

வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான். (more…)