– எஸ். சுரேஷ்–
மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் ஒரு ஆப்பிள் விழுந்தது.
கையில் எடுத்தேன்.
ஆதாம் ஏவாள்,
நியூட்டன், கலீலியோ, காபேர்நிகஸ்,
பூமியைச் சுற்றும் சூரியன்,
தட்டை உலகம்,
சர்ச்சும் அதன் தண்டனைகளும்,
விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் மத்தியில்
நிகழும் போராட்டம்,
என்று சிந்தனை பல இடங்களை அடுத்தடுத்து
தொட்டுக் கொண்டிருக்கும்பொழுது
மரத்திலிருந்து இறங்கிய மந்தி
என் கையிலிருந்த ஆப்பிளை பிடுங்கிக் கொண்டு
தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு
விழுதை பிடித்துத் தாவி ஊஞ்சலாடியது.