பீட்டர் பொங்கல்

ஒரு சினிமா மாஸ்டர்பீஸ் – ‘ஐடா’

டேவிட் டென்பி எழுதிய திரை விமரிசனத்தின் முழு வடிவை இங்கு வாசிக்கலாம் – நியூ யார்க்கர்.

அமெரிக்க திரைப்படங்களின் தொடர்ந்த அசைவுகளுக்கும் கட்டாயமான கட்ஷாட்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போயிருக்கும் காரணத்தால் ஐடா என்ற இந்த அருமையான, புதிய போலிஷ் மொழி திரைப்படத்தின் நிச்சலனம் ஒரு அதிர்ச்சியாய் வருகிறது. மௌனத்தையும் உருச்சித்திரத்தையும் (portraiture) இத்தனை வெளிப்பாட்டுத்தன்மையுடன் பயன்படுத்திக் கொள்ளும் வேறெந்த திரைப்படமும் என் நினைவுக்கு வருவதாயில்லை; இந்தப் படத்தின் பரவசமான கறார்த்தன்மை என்னை ஒரு திகைப்பு நிலைக்குக் கொண்டு சென்றது. நண்பர்களும் தங்கள் அனுபவமும் இது போன்றே இருப்பதாகச் சொல்கின்றனர்: திகைப்பில்லை எனில், கூர்மையான கவனக்குவிப்பும் மிகுந்த மனநிறைவும் நேர்ந்ததாகச் சொல்கின்றனர். கச்சிதமான இந்த மாஸ்டர்பீஸ் நறுக்கான வரையறையோடும் கணக்கு தீர்த்துக் கொள்ளுதலின் தீர்மானத்தோடும் இருக்கிறது- கோபமும் துக்கமும் ஒன்றாய் கலத்தலில் உள்ள கணக்கு தீர்த்தல். (more…)

மொழிபெயர்க்கப்பட முடியாத சொற்களின் அகராதி

ராஸ் பெர்லின் எழுதிய கட்டுரையின் பகுதி இது:

பிரெஞ்சிலிருந்து புதிதாய் மொழிபெயர்க்கப்பட்ட The Dictionary of Untranslatables என்ற நூல்… 11 ஆண்டு கால செயல்திட்டத்தின் விளைவு. 150 பங்களிப்பாளர்களின் 400 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அகராதியைப் பார்க்கும்போது திலோனின் முதல் கலைக்களஞ்சியத்தின் ஒன்பதாம் நூலோடு இதை ஒப்பிட முடியுமென்ற எண்ணம் எழுகிறது. “அறியப்படாத ஒரு கோளுக்குரிய முழு அளவு சரித்திரத்தின் பரந்த, வகைமைப்படுத்தப்பட்ட துணுக்கு” என்று அந்தக் கலைக்களஞ்சியத்தை விவரித்திருக்கிறார் போர்ஹெஸ்.

‘கான்டினென்டல் தத்துவம்’ என்று நாம் வழக்கமாகக் குறிப்பிடுவதுதான் இந்த அகராதியில் பேசப்படும் கோளாக இருக்கிறது. நம் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலோ அமெரிக்க பகுப்பாய்வுத் தத்துவம் எலும்பு வரை உலர்ந்ததாய் எதையெல்லாம் கற்பித்துள்ளதோ அவையெல்லாம் இதுவல்ல: வாழ்வின் பொருள், சிந்தனைகளின் வரலாறு, மானுடத்தின் கதி முதலான இன்ன பிற விஷயங்களைக் குறித்த ஊகம் கலந்த சிந்தனையின் கிறுகிறுக்க வைக்கும் உலகம் இது. (more…)

வால்டர் பெஞ்சமின்

Colin Dickey on Walter Benjamin: A Critical Life : –

ஒரு மாதிரியான டெக்னோ-பியூச்சரிஸ்ட் சியர்லீடிங்குக்கும் (“எதிர்காலம் எத்தனை பிரகாசமாக இருக்கிறது!”) பிற்போக்குத்தன அபோகாலிப்டிய அங்கலாய்ப்புகளுக்கும் இடையே (“எதிர்காலம் நாசமாகிவிட்டது”) தடுமாறிக் கொண்டிருப்பதுதான் நம் வழக்கம் என்றால், பெஞ்சமின் வேறொரு வரலாற்றுப் பார்வையை நமக்கு அளித்தார் – நாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒரு பேரழிவின் சிதிலங்களிடையே நடந்து சென்று கொண்டிருக்கிறோம், எச்சரிக்கையான துக்க அனுஷ்டித்தல் போன்ற ஒன்று மட்டுமே இங்கு நமக்கு அருளப்பட்ட மிகச்சிறந்த வரம். “துக்கங்கள் அனைத்திலும் மௌனத்துக்கான நாட்டம் உள்ளது. நம் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என்பதைவிட, நம்மால் நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை என்பதைவிட, இந்த மௌன நாட்டமே பெரிது,” என்று அவர் 1925ல் எழுதினார். “சோகம் உலகுக்கு வஞ்சம் இழைத்து அறிவு பெறுகிறது என்றால்,” அது தன், “உறுதியான சுய-நாட்டத்தில், உயிரற்ற வஸ்துக்களைத் தன் சிந்தையைக் கொண்டு அணைத்துக் கொள்கிறது, அவற்றை மீட்டெடுக்க”, என்றார். (more…)

உறவுகள் – ஓஸு

An Autumn Afternoon (1962) – Michael Wood

 

 

இனி தந்தைவழி மாட்சிமையின் அமைதியால் மிகவும் அச்சுறுத்தும் சில காட்சிகள் தொடர்கின்றன. மிச்சிகோவாக நடிக்கும் சிமா இவாஷிட்டாவுக்குப் பொருத்தமான மணமகன் குறித்து அவளது சகோதரனும் தந்தையும் விவாதிக்கின்றனர். உடன் படித்த நண்பன் சொல்லும் ஆள் இருக்கிறான் (திரைப்படத்தின் இறுதியில் வரும் அடையாளம் காட்டப்படாத மணமகன் அவன்தான்), அவள் விரும்புகிறாள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் இருக்கிறான். அதன்பின் அவளது சகோதரன் முதலாமவனிடம் பேசிப் பார்க்கிறான் – இருவரும் நிறைய பீரும் சகேயும் குடிக்கின்றனர். ஆனால் இப்போது இதைப் பேசுவதற்கான காலம் கடந்துவிட்டது, அவன் ஒரு பெண்ணை மணம் புரிய ஒப்புக்கொண்டு விட்டான். ஒருவேளை, இவர்கள் முன்னரே வந்திருந்தால்…. (more…)

ஆல்பெர் காம்யு

Entranced by Reality, A Life Worth Living: Albert Camus and the Quest for Meaning, Robert Zaretsky – IAN MARCUS CORBIN : –

ஆல்பெர் காம்யுவை pied-noir என்று சொல்வார்கள், பிரெஞ்சு அல்ஜீரியாவில் வாழ்ந்த பிரெஞ்சுக் குடிபிறப்பு. 1913ல் பிறந்தவர், தன் 25ஆவது வயதில் பிரான்சுக்குத் திரும்பினார். அங்கே அவர் பிரெஞ்சு தேசிய போராளிகளுடன் இணைந்தார், அதிகார அமைப்பை எதிர்த்து Combat என்ற செய்தித்தாளில் எழுதி அதன் பதிப்பாசிரியராக இயங்கினார். பின்னர் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற எழுத்தாளரானார், 1960ல் ஒரு கார் விபத்தில் இறக்கும்வரை பெரும்பாலான காலம் பிரான்சில் வாழ்ந்தார். (more…)