பலவேசம்

புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்

பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது. இது மூன்றையும் முறையே அகவெதிர்வினை, அறிவெதிர்வினை, அறவெதிர்வினை (emotional response, intellectual response, moral response) என்று சொல்லலாம்.

மூவகைப்பட்ட எதிர்வினைகளும் நம் அனைவருக்கும் சாத்தியமாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலனவர்கள் இவற்றில் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடுகிறோம். எனக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அது குறித்து என்ன சொன்னாலும், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல் எனக்குப் புரியாத கதையைப் பற்றி எத்தனை விளக்கம் கொடுத்தலும் அதை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பாது. வன்முறை, காமம், சில அரசியல் சார்புகள் எனக்குப் பிடிக்காவிட்டால் அதைப் பற்றி எழுதப்பட்டவை எவ்வளவு அறிவார்ந்து இருந்தாலும், அவற்றில் உணர்வுகள் எவ்வளவு மெய்ம்மையுடன் வெளிப்பட்டிருந்தாலும் என்னால் அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)