தியானம்

யானை தன் தும்பிக்கையை நீட்டியது.
நானும் கை நீட்டினேன்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.
 
மற்ற யானைகளைப் பார்த்து கையசைத்தேன்.
அவையும் தலையாட்டின.
 
ஒரு குட்டி யானை ஓடி வந்து என் கை குலுக்கியது.
 
உட்காரச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு நான் உட்கார்ந்தேன்.
எல்லா யானைகளும் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டன.
 
இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த குட்டி யானை, சட்டென்று நின்றது. 
எல்லோரையும் பார்த்துவிட்டு, மெதுவாக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டது. 
 
வெகு நேரம் அங்கு பறவைச் சத்தம் மட்டுமே கேட்டது.
 
விடைபெரும்பொழுது எல்லா யானைகளையும் நோக்கி கையசைத்துவிட்டுப் புறப்பட்டேன்
 
குட்டி யானை ஓடி வந்து என் கையை மறுபடியும் குலுக்கிவிட்டு கண்ணை ஒரு கணம் மூடித் திறந்தது.

One comment

  1. அழைப்பு

    மதிப்புக்குரிய அறிஞரே!

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    மிக்க நன்றி

    இவ்வண்ணம்
    உங்கள் யாழ்பாவாணன்

Leave a reply to yarlpavanan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.