-கமலாம்பாள்-
ஒளி
கரைந்து வழிகிறது
வீடுகளின் இடுக்குகள் வழியாக,
யாரும் நின்றுகொண்டிருக்காத
மாடிகள் மேலாக,
சாலையோர மரங்களின்
இலைகளின் மறைவாக
பூச்சிகள் கலைகின்றன
பறவைகள் நகர்கின்றன
அடைத்த கதவுகளுக்கு வெளியே
இரவு நிலவுடன் காத்திருக்கிறது.
ஒளிப்பட உதவி : ikdienas romantika
