– எஸ். சுரேஷ் –
கண்ணை முக்கால்வாசி மூடிக்கொண்டு
பாதி உடல் தண்ணீரில் மூழ்கி இருக்க
வாய் அகல திறந்து படுத்திருக்கிறேன்
வாயினுள் இரு சிறிய பறவைகள் இரை தேடுகின்றன
என் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை
தேனீக்களும் பட்டாம்பூச்சிகள் உட்கொள்கின்றன
என் முதுகில் மூன்று நீர்பறவைகள்
உரிமையுடன் நிற்கின்றன
நதி சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது
அமைதியாய், அஹிம்சையின் வடிவாய்
நிச்சலனமாய் கிடக்கும் என்னை,
கரையில் நிற்கும் எருமை மட்டும்
ஏன் சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறது?