– எஸ். சுரேஷ் –
“நான் புத்தரை வழியில் பார்த்தேன்
ஓடிச்சென்று என் உடலை அவர் கால்களில் உரசினேன்
என்னை தூக்கிகொண்டு தடவிக்கொடுத்தார்
எனக்கு அது மிகுந்த மனசாந்தி அளித்தது”
என்று கூறியது ஒரு கருப்பு பூனை
“நானும் புத்தரை வழியில் பார்த்தேன்
அவரைத் தழுவவேண்டும் என்று அவரை நோக்கி ஓடினேன்
நான் ஓடி வருவதை கண்டதும் அவர் ஓட்டம் எடுத்தார்”
என்று சோகமாக கூறியது ஒரு வரிப்புலி
பிறகு மென்மையாய்ப் புன்னகைத்தது-
“அவர் ஓடுவதைப் பார்த்தும் எனக்கு மனசாந்தி கிடைத்தது”