அதிகாலைச் செய்திகள்

 – எஸ். சுரேஷ் –

அதிகாலை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
காபியை டீபாயில் வைத்துவிட்டு
நாளிதழைப் படிக்க எடுத்தபொழுது
பால்கனியிலிருந்து ஓர் அணில் ஓடிவந்து
என் தோள்மீது ஏறிச் செய்திகளைப் படித்தது
அதன் மெல்லிய மூச்சு என் காதில் கிசுகிசுக்க
சத்தம் செய்யாமல் படித்துக் கொண்டிருந்தது
விவசாயம் குறித்த பக்கம் வந்தபோது
கழுத்தை நீட்டி உன்னிப்பாய் படித்தது
செய்திகளைப் படித்து முடித்ததும்
தோளை விட்டு இறங்கி பால்கனியிலிருந்த
மரத்துக்குத் தாவி மறைந்தது
நான் காபியை எடுத்து குடிக்கலானேன்
இன்றைய நாள் இனிதே விடிந்தது

 

Image Source: Squirrel on Minty Blue, Jessica JH Roller at UGallery

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.