எஸ். சுரேஷ்
திறந்திருந்த ஜன்னல் வழியாய் ஹாலுக்கு
வந்த குரங்கு டைனிங் டேபிள் மேல் இருந்த
ஆப்பிளை தின்ன ஆரம்பித்தபோது
வீட்டம்மாள் பார்த்துவிட்டு கையில் கட்டையுடன்
குரங்கைப் பார்த்து ‘போ போ போ’ என்று கத்த ஆரம்பித்தாள்
அமைதியாக ஆப்பிளைக் கடித்த குரங்கு
“தூ” என்று துப்பிவிட்டு
“ஏன் வாஷிங்டன் ஆப்பிள் வாங்கவில்லை,
வசதி கம்மியோ” என்று கேட்டு, ஆப்பிளை எடுத்துக்கொண்டு
ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிட்டது
பக்கத்து அறையில் இருக்கும் கணவரைப் பார்த்து
இப்பொழுது கத்திக்கொண்டிருகிறார் வீட்டம்மா