கதவு

காஸ்மிக் தூசி –

 

சிலுவையிலிருந்து
பாதி கீழிறக்கப்பட்ட
தீர்க்கதரிசி –
தொங்கிக் கொண்டிருக்கும்
தியாகி

ஒரு கீல் உடைபட்டு
ஒற்றைக் கீலில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
கனத்த
புராதன பழங்கதவு

குடி மயக்கத்தில்
பழகிய வாசற்படியில்
சாய்ந்து கொள்ளும்
உள்ளூர் குடிகாரனைப் போல

ஒரு மூலை
தெருவின் தூசியில் இழுபட
இன்னொரு மூலை
அறைந்து கொள்ளும்
பலமாக

நாளாக ஆக
வலுத்துக் கொண்டு வரும்
நினைவைப் போல.

கதவின் உடைந்த மரத்தில்
மீறி நிற்கிறது
சிறாம்பு

உடற்கூறியல் நூலுக்குள்
திரும்ப முடியாத
தசையடர்ந்த மனிதனின்
தோலுரித்த உடலைப் போல.

கீலாவது ஆணியாவது
கிடக்கட்டும்
என விட்டுத் தள்ளி
எப்பவோ
வெளிநடப்பு செய்திருக்கும்
கதவு

அதன் தோளில்
உலர்ந்து கொண்டிருக்கும்
அந்த கால்சட்டை மட்டும்
இல்லாவிட்டால்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய The Door என்ற கவிதையின் தமிழாக்கம்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.