அஞ்சலி

உலக அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரு எழுத்தாளர்களை இவ்வாரம் இழந்திருக்கிறோம்.

“Things are never as bad as they seem.” – ‘To kill a Mockingbird’ தன்னுள் உறைந்திருக்கும் துயரைத் தாண்டி வாசகனுக்கு நம்பிக்கை அளிக்கும் நாவல். பெரிய பிரச்சனைகளை எளிமைப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டாலும், நாவல் அளிக்கும் ஆசுவாசத்தின் கீற்று தேவையான ஒன்றே. “Mockingbirds don’t do one thing but make music for us to enjoy. They don’t eat up people’s gardens, don’t nest in corncribs, they don’t do one thing but sing their hearts out for us,” என்று ஹார்ப்பர் லீ எழுதியது அவரது எழுத்துக்கு மட்டுமல்ல, அனைத்து கலைகளுக்கும் பொருந்தும். லீ மறைந்தாலும் அவரது இசை இலக்கிய உலகை என்றும் நிறைத்திருக்கும்.

 

‘The Library as a Model for Culture: Preserving, Filtering, Deleting & Recovering’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையில், “….A labyrinthine library is the equivalent of our culture…. insofar culture is a system of ideas, values” என்பதாக உம்பர்ட்டோ ஈக்கோ சொல்கிறார். அவர் 30000துக்கும் மேற்பட்ட புத்தங்களை தன் தனிப்பட்ட நூலகத்தில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. “I have always imagined that Paradise will be a kind of library,” என்று கூறிய போர்ஹெஸ் போலவே ஈக்கோவும் சொர்க்கம் என்பதை நூலகமாகவே உருவகித்திருக்கக்கூடும். தங்கள் சொர்க்கத்தில், ஈக்கோவும், போர்ஹெஸும், பதிப்பிக்கப்பட்ட அனைத்து நூல்களும் முடிவில்லாமல் விரியும் ஏதோவொரு நூலகத்தில், இப்பொது தத்துவமும் இலக்கியமும் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஒளிப்பட உதவி – Pinterest, Interview

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.