சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10

தனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்

மலையாள இலக்கியத்தின் சிறந்த இருபது நாவல்கள் இவை என்று நம்புகிறோம்.

நாங்கள் வாசித்த நாவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது.

1 கஷக்கின்தே இதிஹாசம் (The Legend of Khasak)– O V Vijayan

மலையாள இலக்கியத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய நாவல் என்று இதைக் கருதுகிறேன் – கஸக்கிற்கு முன், கஸக்கிற்குப் பின் என்று பிற நாவல்களை வகைமைப்படுத்தும் அளவுக்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இது. விஜயன் இந்த நாவலை முன்னரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலோ, அல்லது Gregory Rabassa போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்குக் கிடைத்திருந்தாலோ இது உலக அளவில் போற்றப்பட்டிருக்கும். கஸக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரவி அதன் தொன்மங்கள், மக்கள், அவன் கஸக்கைவிட்டு பின்னர் வெளியேறுவது என்று ரவியின் பயணத்தை விவரிக்கும் நாவல். ரவியின் பௌதிக, ஆன்மிக பொருளை வரையறுக்கும் நாவல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மூச்சுத்திணற வைக்கும் அவமானத்தைவிட்டுத் தப்பிச் செல்லும் ரவி, மிக அசாதாரணமான இந்த இடத்தில் அடைக்கலம் புகுகிறான், அவனால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களைச் சந்திக்கிறான். இதை எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயிற்றாம், மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த நாவல் இது.

ஆங்கில மொழிபெயர்ப்பு – ஓ வி விஜயன்

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Dharmapuranam

2 நாலுகெட்டு (Legacy) – M T Vasudevan Nair

எம்டியின் முதல் நாவல் இது, 1958ல் பதிப்பிக்கப்பட்டது. கேரளாவின் நாயர் குடும்பங்களில் நிலவிய தாய்வழி சமூக அமைப்பின் இயல்பையும் அதன் நசிவையும் விவரிக்கும் நாவல். இதன் நாயகன் அப்புண்ணி தனது குழந்தைப்பருவத்தை அப்படிப்பட்ட ஒரு இல்லத்தில் கழிக்கிறான். அதன் குடும்பத்தலைவரால் அவன் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னைக் கேவலப்படுத்தியதற்கு பழி வாங்கவும் தன் தந்தையைக் கொன்றதாகச் சொல்லப்படுபவரைக் கொன்று பழி தீர்க்கவும் அவன் துடிப்பதும்தான் கதை.

ஆங்கில மொழிபெயர்ப்பு – Naalukettu: The House Around the Courtyard, Gita Krishnankutty

3 ரெண்டாமுழம் (The Second Turn)- M T Vasudevan Nair

எம்டியின் ஆகச்சிறந்த இந்தப் படைப்பில், பீமனின் பார்வையில் மகாபாரதக் கதையைச் சொல்கிறார். எந்த விஷயத்திலும் அவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இல்லை, எனவேதான் நாவலின் தலைப்பு, இரண்டாம் முறை. பரவலாக அறியப்பட்டுள்ள மகாபாரதக் கதைகளுக்கு பீமனின் பார்வையில் புதிய பொருள் அளிக்கிறார் எம்டி.

ஆங்கில மொழிபெயர்ப்பு – Bhima: The lone warrior, Gita Krishnankutty

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Kaalam, Asuravithu & his short story collections

4 ஆள்க்கூட்டம் (The Crowd) – Anand

கருத்துகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டை விவரிக்கும் நாவல் இது. ஒரு கூட்டமாய் வாழ்பவர்களின் பெரும் அழுத்தம் நிறைந்த வாழ்வை விவரிக்கும் நாவல். பம்பாயைக் களமாய்க் கொண்ட இந்த அப்ஸ்ட்ராக்ட்டான, ஆழமான தத்துவ விசாரங்களை மேற்கொள்ளும் இந்த நாவல் இவர்களின் ஜீவாதாரப் போராட்டங்களைப் பேசுகிறது. இவர்களில் சிலருக்கு எந்த லட்சியமும் இல்லை. வேறு சிலருக்கு, வாழ்வா சாவா என்ற மரணப் போராட்டமாக இருக்கிறது- கீழே விழுபவர்கள், விரட்டி வருபவர்களால் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தங்களைச் சுற்றி நிகழ்வது அனைத்தையும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். காத்திரமான, உள்ளிழுத்துக் கொள்ளும், சிந்தையை அசைக்கும் நாவல் இது. மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Marubhoomikal Undaakunnathu

5 பாத்துமாயுடே ஆடு (Pathumma’s Goat)- Basheer

வைக்கம் முகமது பஷீர் தனது சகோதரியின் ஆடு பற்றி எழுதிய நகைச்சுவை நாவல் இது. அவரது குடும்பத்தினரே இந்த நாவலின் பாத்திரங்களாக இருக்கின்றனர், கதை தலையோலப்பரம்பில் உள்ள அவரது வீட்டில் நிகழ்கிறது. அதன் நிகழ்வுகளை பஷீர் நேரடியாக, தன்மை ஒருமைக் குறிப்புகளாகக் கூறுகிறார்.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Baalyakaalsakhi, Premalekhanam & any Basheer story

6 ஒரு தேஷதிந்தே கதா (Tale of a Place)- SK Pottekkad

SK Pottekkad வாழ்ந்த காலிகட்நகரைப் போன்ற அதிரணிப்படம் என்ற ஊரைப் பற்றிய நாவல் இது. இந்த நகரை விவரிக்கும்போதே பொற்றேகாட், சுதந்திரப்போராட்ட கால இந்தியாவில் நிலவிய சூழலையும் விவரிக்கிறார். அதிரணிப்படத்து மக்கள் பல்வகைப்பட்டவர்கள், அந்த ஊரின் காற்றைச் சுவாசித்து வளர்ந்தவர்கள். இதன் நாயகன், ஸ்ரீதரன் இவர்களில் ஒருவன். நகரின் இதயத்துடிப்பையும் அங்கு வாழ்ந்த தலைமுறையினரையும் மிகச் சிறப்பாக எஸ்கே சித்தரிக்கிறார். தலைசிறந்த இந்த நாவலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- VishaKanyaka, Oru Theruvinte Katha

7 மையழி புழையுடே தீரங்களில் (In the banks of River Mayyzhi) – M Mukundan

எம் முகுந்தனின் தலைசிறந்த நாவல் இது. சுதந்திரத்துக்கு முன்னர் பிரஞ்சு காலனியாக இருந்த மாஹியின் (மலையாளத்தில் மைய்யாழி என்று அழைக்கப்படுகிறது) கதை இது. மாஹியின் வரலாற்றைப் பேசும் இந்த நாவல் தன் ஆற்றல்களை உணர்ந்து கொள்வதற்கான அதன் கிளர்ச்சியையும் போராட்டத்தையும் விவரிக்கும் நாவலாகவும் ஆகிறது.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Kesavante Vilaapangal, Daivathinte Vikrithikal

8 ஸ்மாரகசிலகள் (Memorial Stones)- Punathil Kunjabdulla

புராதன மசூதி, அதையொட்டி வாழும் மக்கள் மற்றும் அவர்களின் தொன்மங்களைப் பற்றிய கதை இது. கான் பகதூர் பூக்கொய்யா தங்கல் ஒரு குறுநில மன்னன் போலிருந்த வட மலபார் கிராமத்தைக் களமாகக் கொண்ட நாவல், பூக்கொய்யாவையும் அவனைச் சுற்றி வாழ்பவர்களையும் மையமாய் கொண்டுள்ளது.

9 அக்னிசாக்ஷி (Fire as Witness) – Lalithambika Antharjanam

நம்பூதிரி குடும்பம் ஒன்றில், ஆசாரப் பிடிப்புள்ள கணவனுடன் வாழும் தேத்துக்குட்டி என்ற பெண்ணின் கதை. அவளது சகோதரன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, நம்பூதிரி பெண்களின் மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறான். ஆனால், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள விரும்பாத குடும்பத்தில் தேத்துக்குட்டி மணம் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளது கணவனும் அவள் விருப்பத்துக்கு ஏற்றவனாக இல்லை. எனவே அவள் வீட்டைவிட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் இணைகிறாள். இறுதியில் துறவியாகிறாள்.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- சிறுகதைத் தொகுப்பு

10 சுந்தரிகளும் சுந்தரன்மாரும் (The Beautiful Women and Handsome Men)- Uroob

இது உருப்பின் சிறந்த படைப்பு. சுதந்திரப் போராட்டம் மற்றும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் மலபார் பகுதியில் வாழ்ந்தவர்களின் கதை. இவர்கள் நிலச்சுவான்தார் முறை மற்றும் சாதியமைப்பைக் கடந்துவிட்டவர்கள். விஸ்வம், ராதா இவ்விருவரின் கதை.

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Ummachu.

One comment

  1. இந்த பட்டியலுக்கு மிகவும் நன்றி.. நாலுகெட்டும், கஷக்கின்தே இதிஹாசம் , இரண்டாமுழம் மட்டுமே நான் இணையத்தில் கண்ட பல top 10 பட்டியல்களில் கண்டது, இதைத்தவிர குறிப்பிட்டிருக்கும் மற்ற 7 புத்தங்களும் புதிய அறிமுகமே.. இதையும் வாங்கிறவேண்டியதுதான்.. நன்றி 🙂 மற்றபடி ‘ஆடுஜீவிதம்’ இதில் இல்லையே ?

    Thank you for this Top 10 list recommendations written in thamizh. I was hunting for such a top 10 highly recommended books in malayalam. This blog comes little late but with almost 7 new recommendations for me 🙂 .. Only Naalukettu, Kakshathindey Idhihasam & Rendamuzham from this list were found in most of the lists available in internet. Thanks for the new recommendations. Btw, looks like ‘Aadujeevitham’ indeed was very good

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.