Enipadikal (Ladder steps) – Thakazhi
கேசவப்பிள்ளையையும் திருவாங்கூர் செயலகத்தில் அவரது வளர்ச்சியையும் விவரிக்கும் கதை. அப்போது திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்தில் நிகழும் கதை. கேசவப்பிள்ளை ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்கிறான், அதன்பின் அதன் படிநிலைகளில் மெல்ல மெல்ல ஏறி முதன்மைக் காரியதரசியாக உயர்கிறான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களோடு தனக்கு ஏற்படும் தொடர்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவனது வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தன் வெற்றிக்கு உதவுமென்றே உறவுகளைப் பேணுகிறான் கேசவப்பிள்ளை. இது குறித்து அவனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அத்தனையும் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. ஏணிப்படிகள் ஸர் சி,பி.யின் திவான் ஆட்சி முதல் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை தெளிவாக விவரிக்கிறது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்கள் : Chemmeen, Randidangazhi
Verukal (Roots)– Malayattoor Ramakrishnan
கேரளாவில் வாழும் தமிழ் பிராமண குடும்பம் ஒன்றின் கதைதான் வேருகள். மலையத்தூர் தன் வாழ்வை ஓரளவுக்கு இந்த நாவலில் விவரித்திருக்கிறார்- இதன் நாயகன் நவீன வாழ்வை விரும்பும் மனைவியின் வற்புறுத்தல் காரணமாக பரம்பரை வீட்டை விற்க முயற்சிக்கும்போது தன் கடந்த காலத்தையும் வேர்களையும் திரும்பி பார்க்கிறான்.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்- Yakshi
Aalahayude Penmakkal (Daughters of God the father) – Sara Joesph
‘Mattathi’, ‘Othappu’ என்று தொடரும் மூன்று நாவல்களில் இந்த முதல் நாவல் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்களின் நிலையைச் சித்தரிக்கிறது. இதற்கு அப்பாலிருக்கும் விரிந்த சமூக அமைப்பு இந்த மக்களின் வாழ்வாதார நிலையைக் கண்டுகொள்வதே இல்லை, பொதுவாக வளர்ச்சியின் பெயராலும் மாற்றத்தின் பெயராலும் இவர்கள் தங்கள் தங்குமிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர், இவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. இவர்களின் வாழ்வு தலைகீழாக மாறுவது இதன் மையப்பாத்திரமான ஆன்னி என்ற பெண்ணால் விவரிக்கப்படுகிறது. தான் சார்ந்திருக்கும் சபால்டர்ன் கூட்டத்தின் .குரலாக இவள் இருக்கிறாள், இவளைக் கொண்டு பெண்ணியப் பார்வையும் வெளிப்படுகிறது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்- Mattathi
Lanthan Batheriyile Luthiniyakal (Litanies of the Dutch Battery)- N. S. Madhavan
என். எஸ். மாதவன் எழுதிய ஓரே நாவல், இது கடலையோட்டிய கொச்சி தீவின் வாழ்க்கையை ஜெஸ்ஸிகா என்ற இளம் பெண்ணின் குரலில் விவரிக்கிறது. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலத்தைக் களமாய் கொண்ட இந்த நாவல், வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்துத் திரும்புகிறது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Higuita
Pandavapuram – Sethu
மலையாள மொழியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றான பாண்டவபுரம், சேதுவின் சாதனையாகக் கருதப்படுகிறது. சொல்லப்படாத காரணங்களால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கதை இது. அவளது வலி, கோபம் என்ற உணர்வுகளின் வழி கதை பயணிக்கிறது. அவன் தனக்கென ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்கிறாள் – அவளது கணவன் உட்பட அனைவரும் அவளிடம் வித்தியாசமாக நடந்து கொள்ள இதுவே காரணமாக இருக்கலாம். ஜூவான் ரூல்போவின் பெட்ரோ பராமோவில் உள்ளது போல், நாவல் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் மாறி மாறி பயணிக்கிறது. மிகச் சிறிய இந்தப் புத்தகத்தை எளிதில் வாசித்து முடித்து விடலாம், ஆனால் புரிந்து கொள்ளக் கடினமானது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Adayalangal
Oru Sankeerthanam Pole – Perumbadavam Sreedharan
பெரும்பதவத்தின் பிற நாவல்களை நீங்கள் ரசிக்காமல் போகலாம், ஆனால் இதை விரும்பி வாசிக்காமலிருக்க முடியாது. தாஸ்தயெவ்ஸ்கி தனது மனைவி அன்னாவைச் சந்தித்த காலம் துவங்கி அவர்கள் பிரிந்து, மீண்டும் இணையும் காலம் வரை விவரிக்கிறது. தாஸ்தவெஸ்கியின் மனதின் ஆழத்துள் சென்று அவரது தனிமை, குறைகள், துயரங்கள் மற்றும் ஆன்மிக வாதைகளைச் சித்தரிக்கும் நாவல் இது.
Aadujeevitham (Goat’s life)– Benyamin
கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என்று ஆடுஜீவிதத்தைச் சொல்லலாம். அரேபிய வளைகுடாவில் வேலை செய்யச் செல்லும் நஜீப் என்ற கேரள இளைஞனின் உண்மைக்கதை இது. அவன் அங்கு இரக்கமற்ற ஒரு அரேபியனின்\ பாலைவன பண்ணை வீட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அவன் பன்னையிலிருந்து தப்பியோடுகிறான், அவனது பாலைவனப் பயணத்தைத் தொடர்கிறது இந்த நாவல். செல்வம் கொழிக்கும் இடமாகக் கேரளாவில் கருதப்படும் வளைகுடாவில் நஜீப் எதிர்கொள்ளும் துன்பங்களை முழுமையாக இந்நாவல் விவரிக்கிறது..
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Akkaporinte 20 Nasrani Varshangal (Twenty Years of Christian Quarrels).
Ini Njan Urangatte (Let me sleep now)– P K Balakrishnan
மகாபாரதத்தில் மிகவும் அவமதிக்கப்படும் பாத்திரமான கர்ணனின் பார்வையில் சொல்லப்படும் கதை இது. கர்ணனின் பிறப்பு முதல் மரணம் வரை வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் அவன் எதிர்கொள்ளும் உணர்வுகளை பாலகிருஷ்ணன் இந்நாவலில் விவரிக்கிறார். கர்ணனை நாயகனாகக் கருதாமல் ஒரு மனிதனாக இந்நாவல் அணுகுகிறது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Jaathivyavasthithium Keralacharithravum (The Caste system and History of Kerala)
Prathimayum Raajakumariyum (Statue and the Princess) – Padmarajan
ஓர் இளவரசிக்கும், உள்ளூர் சந்தையில் சிலை போல் நிற்பவனுக்குமிடையே மலரும் காதலை விவரிக்கும் இந்த நாவலை எழுதியவர் கேரளாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன். ஞான் கந்தர்வன் போன்ற தொன்மக் கதைகளை இயக்கிய பத்மராஜனின் சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது அவரது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இதைச் சொல்ல முடியாது. ஆனால் இதிலுள்ள விவரணைகள் மலையாளத்தின் மிகச் சிறந்த மிகுபுனைவுகளில் ஒன்று என்ற இடத்தில் இதை நிறுத்துகின்றன.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Short Stories of Padmarajan
Ushnamekhala (The Tropics) – Kaakkanaadan
கம்யூனிச இயக்கம் கேரளாவில் வளர்ந்த கதையை மாறுபட்ட கோணத்தில் இந்த நாவல் விவரிக்கிறது. பியூடலிசத்தையும் அநீதியையும் எதிர்த்துப் போராடும் சிவன் என்ற கம்யூனிஸ்ட்டின் கதையாக விரிகிறது இந்த நாவல். அவன் தன் வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி தில்லியில் வேலையில் சேர நிர்பந்திக்கப்படுகிறான். வெகுகாலத்துக்குப்பின் அவன் வீடு திரும்பும்போது, தான் வளர்த்த கட்சி இப்போது ஏழைகளைவிட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். இந்த நாவலில் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியிருக்கும் காக்கநாடன் சாதாரண மக்களின் போராட்டங்களை விவரிக்கிறார். இந்த சாதாரணர்கள் ஓரளவுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது சோகமான விஷயம்தான்.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்புகள் – Short Stories of Kaakanaadan, Orotha, Parankimala
இந்த பதிவிலும் 5/6 புதிய முத்துக்கள்.. நன்றி 🙂
‘ஒரு சங்கீர்த்தனம் போலே’ தாஸ்தவெஸ்கி பற்றியது என்றதும், போரடிக்கும் தத்துவ விசாரமாயிருக்கும்னு நினைத்தேன், ஆனால் அது மிக சுவாரசியமான புத்தகம்னு வீட்ல (படிச்சிகிட்டுயிருக்காங்க) சொல்றாங்க. இந்த புத்தகங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு எதெர்க்கெல்லாம் இருக்கு ?
thanks for introducing new gems via this 2nd part of the series..
I recently got ‘Oru Sangeerthanam Poley’ and read the synopsis which said that the book is about Dostoyevsky, my guess was this is going to be a heavy book on literature, philosophy..etc. But to my surprise, wife said this is one of the very good books that takes the reader into it.. i wish we could find thamizh translations of these books..
thanks for introducing these..