களவாடப் பட்ட கொங்கையாடை – பிரோஸ்கான் கவிதை

அது முதல் சந்திப்பை போன்றல்ல
வெட்க கூச்சம் சர்வம் கலையும்
ஆடை போல மெது மெதுவாக
கழற்றி விடும் நெருக்கத்தில்
நீ இட்ட இரகசிய சமிக்ஞை
சாத்தியத்திற்கு உட்பட்ட
ஒரு சம்பிரதாய முத்தத்தை 
தந்துவிடச் சொல்லியே.
நம் பருவத்திலிருந்து ஒரு ஆதி இசை
அவ்வ போது
பச்சை நரம்புகள் வழியே
வந்து வந்து செல்கிறது.
ஆண் உடல் கடும் பாறை
பெண்ணுடலின் மென் சூடு படும் போது
பனியை உண்ணும் சூரியனைப் போல
உறிஞ்சும் நிகழ்வில்
பெண் வெளி முழுதும்
ஈரத் துணியை உலர்த்துவது
வெப்ப மண்டலத்து வலிகள்.
ஒரு செம்பறி ஆட்டின் புல் மேய்தல்
பின் இரவின் நெருக்கத்தின் அர்த்தங்கள்
அள்ளி விசுறும் முன்னே நாம் கேட்ட
ஆதி இசையென
உன் மேனி தழுவி
அதன் நுனியில் இட்ட முத்தம்
முதலானவையல்லயென
நீ நகக் குறி பதிக்கிறாய்
என் நெஞ்சின் மேல்.
பால்கனியை பிழிந்து வெப்பம் பிசுற
சூரியனை அழைத்து
கொங்கையாடைகளை பிழிந்து
காயப் போட்டு முடித்து
உறங்கி எழும்புகிறேன்.
காணாமல் போயிருந்தது அது.
காமம் களவாடிச் சென்றுக்குமோயென்று
அந்த வெப்ப மண்டலத்து நிகழ்வை
முடித்து வைக்க பணிக்கப்பட்டிருக்கிறேன்
நான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.