பெ. விஜயராகவன்

பிரக்ஞை

பெ. விஜயராகவன்

காலைப் பொழுதின் மழைத்தூறலில்
மிக ஞாபகமாய்
கக்கத்தில் மடங்கிய குடையுடன்
மெல்ல நிதானித்து நடக்கும்
நரை கூடிய கிழவன் நடையில்
காண்கிறேன்
பிரக்ஞையின் பெருவெளித் தடத்தை.