ஏதேதோ செய்து திருத்தப்பட்ட முகம்
காற்றில் அலையும் கேசம்
புதிய வாசனை
கண்களை இம்சிக்கும் நிறத்தில்
இறுக்கமான உடை
இரண்டு வருடங்களையாவது
குறைத்துக் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம்
எதற்கென்றே தெரியாதொரு அசட்டுப் புன்னகை
ஏதோ, ஐம்பது பேராவது வீழ்ந்தால் சரி.
– அதிகாரநந்தி