கமலாம்பாள்

ஒரு நாள் முடிகிறது

-கமலாம்பாள்-

end of days

ஒளி
கரைந்து வழிகிறது
வீடுகளின் இடுக்குகள் வழியாக,
யாரும் நின்றுகொண்டிருக்காத
மாடிகள் மேலாக,
சாலையோர மரங்களின்
இலைகளின் மறைவாக
பூச்சிகள் கலைகின்றன
பறவைகள் நகர்கின்றன
அடைத்த கதவுகளுக்கு வெளியே
இரவு நிலவுடன் காத்திருக்கிறது.

ஒளிப்பட உதவி : ikdienas romantika

பூச்சி

– கமலாம்பாள்-

தூரத்து அண்டத்தின்
ஓர் துகள்;
இரவின் இருளில்
சிறு உயிர்;
சிறு கடி; சிறு வலி;

பு ச் சி

பார்வையின் விளிம்பின்
ஒரு ஓரம்;
உற்றுப் பார்த்தால் நகரும்;
வாய் மட்டும்தான்;

புபூ ச்ச் சிசீ

ஒன்றுதான்..ஆனால்
எங்கும் எதிலும்;
சிதறிய கண்கள்;
விழித்துக்கொள்கிறது
மூன்றாவது கண்.