ஸ்ரீதர் நாராயணன்

அதிகாரத்தின் ஆயுதங்கள் – வேல ராமமூர்த்தியின் சிறுகதையை முன்வைத்து

-ஸ்ரீதர் நாராயணன்-

நான் படித்த பள்ளியில் சீருடையாக காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும்தான் இருந்தது. ஏனோ அந்த காக்கி கால்சட்டையை அணியவே பிடித்தம் இருக்காது. அக்கம்பக்கத்து பள்ளிகளில் அடர்நீலம், பழுப்பு வண்ணம் கொண்ட சீருடைகள் எல்லாம் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஏன்தான் இப்படி ஒரு நிறத்தை சீருடையாக தேர்ந்தெடுத்தார்களோ என்று பெரும் கோபம் கோபமாக வரும். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தேசிய மாணவப்படையில் சேர்ந்த போது அந்த எண்ணம் அப்படியே தலைகீழாகிப் போனது. இருள்பிரியாத அதிகாலை வேளையில் தெருநாய்களை எல்லாம் எழுப்பும் வண்ணம் க்ரீச்சிடும் பூட்ஸ்களோடு, கஞ்சிப் போட்ட விறைப்பு காக்கி உடுப்பில் பரேடுக்கு மிடுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன். (more…)

எரிந்த கட்சி

-ஸ்ரீதர் நாராயணன்-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா

ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.

“இப்படியாகத்தானே………..

ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..

‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’ (more…)

திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)

வாசவதத்தை – 2

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)

வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான். (more…)