மாலையுடன் பினிஷ் லைனில்
சீப் கெஸ்ட் காத்திருக்க
துப்பாக்கி சப்தம் கேட்டு
புல்லெட் வேகத்தில் புறப்பட்டது முயல்
தகிக்கும் வெயிலில், வறண்ட காட்டுக்குள்
ஓடிக்கொண்டிருந்தது
தாகம் எடுக்க, சிறு குட்டையில் தேங்கியிருந்த
நீரைக் குடித்து, மரநிழலில் படுத்து தூங்கிவிட்டது
அடிமேல் அடிவைத்து வந்த ஆமை
தூங்கிக்கொண்டிருந்த முயலின் வாலைக் கடித்தது
“அம்மா” என்று அலறி எழுந்த முயல் வேகமாக ஓட
தண்ணீரை குடித்துவிட்டு மரநிழலில் தூங்கியது ஆமை