இடிபாடுகளின் மத்தியில்  

காஸ்மிக் தூசி –

ruins

கோயிலின் கூரை
அனுமாரின் தலையில். ஆனால்

அதைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை.
ஒருவேளை அனுமாரே
கோயிலை இந்நிலையில்
விரும்பலாம்

தன் குட்டிகளுடன் வாழ
தெருநாயொன்று

இடிபாடுகளின் மத்தியில்
ஒரு குடியிருப்பை
கண்டடைந்து விட்டது.

உடைந்த ஓடுகள்
அடைத்துக்கொண்டிருக்கும்
வாசல் படியை தாண்டி நின்று
எச்சரிக்கையுடன் பார்க்கிறது
நாட்டுநாய்.

ஒருவேளை இந்தநாய்
கோயிலை இந்நிலையில்
விரும்பலாம்

தாயின் மேல்
விழுந்து புரள்கின்றன
புறக்கணிக்கப்பட்ட குட்டிகள்.

கோயில் இப்படி இருப்பது
இவைகளுக்ளெல்லாம்
பிடித்திருக்கலாம்

கருப்புநிறக் காதுகள்
கொண்ட நாய்க்குட்டி
தன் எல்லையைதாண்டி
சென்றுவிட்டபின்

அதன் காலின்கீழ்
ஒலியெழுப்புகிறது
ஒரு உடைந்தஓடு

பீயுருட்டி வண்டின்
இதயத்தில் பீதியூட்டி

வெளியே
வரமுடியாதபடிக்கு

உத்தரத்தின் எடை அழுத்தும்
உடைந்த உண்டியலின் கீழ்

அடைக்கலம் தேடி ஓடவைக்க
இதுபோதும்.
வழிபாட்டுக்கு
வழியில்லாத இடம்தான்.

என்றாலும் இது
கடவுள் குடியிருக்கும் இடமன்றி
வேறில்லை

ஒளிப்பட உதவி- shanefrom.me

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.