முன்னால் இருந்தது இப்பொழுது பின்னால் இல்லை – கவிதை நூல் விமர்சனம்

மித்யா

“Future is no longer the past” – New poems by Gregory Hart

cover

Surrealism, Dadaism, Modernism, Expressionism, Post-Modernism என்று பல பாதைகளில் பயணித்த ஐரோப்பிய கவிதை இப்பொழுது தனக்கென தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைதான் Dual Merge poetry. இதற்ககான manifesto எழுதிய போலிஷ் கவிஞர் Ceslaw Krapunski Dual Merge கவிதையை இவ்வாறு விவரிக்கிறார், “In the modern world it becomes very important that we keep our roots intact. The problem of rootlessness affects the modern youth who want to dissociate themselves from the past. While this attitude does give their poetry a sense of urgency and is able to relate to other youth, the poems themselves refuse to stand scrutiny because their foundations are weak. Only the poetry which is anchored in the past does it stand on its own for a long time. The Dual-Merge poetry tires to merge the past and future and the resultant poem reflects the present. Poets earlier have taken the past as their subject of their poetry and tried to draw parallels with the current situation. So we know the poet is talking about the past and we are able to clearly see how the poet s talking of the past and the way in which he is relating it to the present. Dual Merge poetry on the other hand only merges the past with the future into a single whole. The poet becomes both a protector of the past as well as a prophet. It is in this poetry that the poet achieves his ultimate standing in the society1

போலிஷ் கவிஞர்கள் முதலில் இதை முன்னெடுத்தார்கள். அதற்கு பிறகு ஐரோப்பியா முழுவதும் இந்த டிரெண்ட் பரவியது. கிரேக்க காவியங்களையும் வரப்போகும் விஞ்ஞான புரட்சிகளையும் இணைத்து பல கவிதைகள் வர ஆரம்பித்தன. இந்தக் கவிதைகளை எழுதிய கவிஞர்கள் வெகுவாக புகழப்பட்டார்கள். இந்தக் கவிதைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முடங்கிக் கிடந்த பதிப்பங்களுக்கு இந்த டிரென்ட் புத்துயிர் ஊட்டியது.

இப்படி எல்லோரும் கிரேக்க காப்பியங்களைப் பின்புலமாக கொண்ட கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, Gregory Hart என்ற ஐரிஷ் கவிஞர் இந்திய காப்பியங்களை முன்வைத்து Dual Merge கவிதைகளை எழுத ஆரம்பித்தார். முதலில் ஐரோப்பியர்களுக்கு இவர் கவிதைகள் குழப்பமாக இருப்பதாக தோன்றின. ஆனால் அவருடைய மொழி எல்லோரையும் ஈர்த்தது. ஐரோப்பியாவில் பலர் இந்திய காப்பியங்களை படிக்க ஆரம்பித்தனர். இந்திய காவியங்களின் டிமாண்ட் அதிகமாகியது. இப்பொழுது அங்கு அதிகம் விற்கும் புத்தகங்களின் பட்டியலில் ராஜாஜியின் ‘சக்ரவர்த்தி திருமகனும்’ ‘வியாசர் விருந்தும்’ இடம்பெற்றுள்ளன.

இப்பொழுது அவருடைய சில கவிதைகளை பார்ப்போம்.

As he was about to step into his chariot / wearing his armor / and carrying his bow /Kunti asked him/ “Are you going to the war Arjuna?/ Go ahead my son, go ahead / Come back triumphant “//

நாம் இந்த கவிதையை உன்னிப்பாக கவனித்தால் நமக்கு பல உண்மைகள் புலப்படும். கவசம் தரித்துக்கொண்டு, வில்லேந்தி தேரேறும் அர்ஜுனன் போருக்கு அல்லாமல் வேட்டைக்கா போவான்? அவன் போருக்கு போகிறான் என்று குந்திக்கு தெரியாதா? அவளுக்கு தெரியாமல்தான் போர் நடக்கிறதா? இல்லை. அவளுக்கு நன்றாக தெரியும். அவள் சந்தேகமாக கேட்டது அர்ஜுனனுக்கு உள்ளிருக்கும் சந்தேகத்தை பிரதிபலிக்கத்தான். போருக்குச் சென்றதும் அர்ஜுனனுக்கு சந்தேகம் வருகிறது. கண்ணனிடம் கேள்வி கேட்கிறான். கண்ணனும் பகவத் கீதை உபதேசம் செய்கிறான். அர்ஜுனன் போர் செய்யப் புறப்படுகிறான். ஆனால் இதையே குந்தி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறாள், பாருங்கள். “Are you going to the war Arjuna?” என்று கேட்கும்பொழுது அர்ஜுனனின் சந்தேகம் எடுத்துரைக்கப்படுகிறது. “Come back triumphant“ என்று அவள் சொல்லும்பொழுது கீதையின் சாரம் நமக்கு கிடைத்துவிடுகிறது. எவ்வளவு அருமையாக ஒரு சிறு கவிதையில் கீதையை கவிஞர் அடக்கிவிட்டார்.

Go ahead my son, go ahead” என்ற வரி எதற்கு வருகிறது என்று நீங்கள் யோசிக்கவேண்டும். இது இல்லாமலும் கவிதை பிரமாதமாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த வரி இங்கே வருவதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. ‘Go ahead my son, go ahead’ என்பதற்கு பதில் “Go ahead my daughter, go ahead” என்று வந்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? ஆம், எல்லோருக்கும் கர்ணன் படத்தில் வந்த பாடல்தான் மனதில் தோன்றும். இங்குதான் இதிகாசம் மற்றும் இன்றைய நடைமுறையை ஒன்றாக இணைக்கிறார் கவிஞர். நமக்கே கர்ணன் படம் ஞாபகம் வந்தால் குந்திக்கு கர்ணனின் ஞாபகம் வராதா? அர்ஜுனனை பார்க்கும்பொழுது கர்ணனை நினைத்து அவள் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும்? அந்த பாடல் வரிகள் நம்முள் சென்று நமக்கு ஒரு அக விரிவை தருகின்றன அல்லவா? இதைத்தான் ஆங்கில கவிதை விமர்சகர், T.S.Pound என்பவர், “Knowing the unknown from the known is one of the important aspect of Dual Merge poetry2 என்று எழுதினார்.

இன்னொரு கவிதையை எடுத்துக்கொள்வோம்: While he was crossing the road / Buddha cross the same road from the other side / neither of them saw the other

Dual Merge கவிதையில் நகைச்சுவை இல்லை, நையாண்டி இல்லை, தன்னைதானே மிகவும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு இருப்பது உண்மையே. “Why are all the Dual Merge poets so glum? Why do they take their role so seriously? You may be a prophet but no one is stopping you from smiling3” என்கிறார் பாப் டால்க்ளிஷ் என்ற கவிஞர். இந்த கவிதை தொகுப்பில் உள்ள பல கவிதைகள் இந்த விமர்சனத்தை பொய்யாக்குகின்றன. எல்லா கவிஞர்களும் எதற்கோ எப்பொழுதும் புத்தரை சாலையில் சந்திக்கிறார்கள். சந்தித்தபோது அவர் ஏதோ சொல்கிறார். இது ஒரு தேய்வழக்கு ஆகிவிட்டது. எல்லோருக்கும் கவிஞர்கள் புத்தரை சந்திப்பதும் அவர் ஏதோ சொல்வதும் அலுப்பூட்ட ஆரம்பித்துவிட்டது. அதை உடைக்க புறப்பட்ட கவிதைதான் இந்த Dual Merge கவிதை. இதில் புத்தரின் இதிகாசமும் இருக்கிறது, இன்றைய கவிதை டிரெண்ட் பற்றிய விமர்சனமும் இருக்கிறது- மதங்களால் பிளவுப்பட்டுக்கொண்டிருக்கும் சமுதாயம் புத்தர் தனக்கு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுகிறது என்ற ஒரு விமர்சன பார்வையும் இந்த கவிதையில் இருக்கிறது. அதற்கு மேல் நகைச்சுவை உணர்வு மேலோங்கி நிற்கிறது.

(என் நண்பன் ஒருவன் இந்த கவிதை நம் நாட்டில் உள்ள சாலைகள் பற்றியும் டிராபிக் சென்ஸ் இல்லாமல் ஓட்டுபவர்கள் பற்றியும் என்கிறான். சாலையை கடக்கும்பொழுது நம் முன் யார் வந்தாலும் நம்மால் பார்க்க முடியாது. அப்படி பார்த்துக்கொண்டிருந்தால் தண்ணீர் லாரி மோதிவிடும். இதைதான் கவிஞர் சூசகமாக சொல்கிறார் என்றான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அக விரிவை கொடுப்பது தான் சிறந்த கவிதை. “The way in which a poem expands to fill space and time determines the quality of the poem. The language, phrasing, grammar, rhyme and rhythm are all subordinate to the central requirement that the poem be well defined in terms of the space and time it occupies” – John Sheldon 4)

ஒரே ஒரு கவிதையை மட்டும் இங்கு தந்துவிட்டு நான் விடை பெறுகிறேன்- “Get the golden deer / and come back home soon / before it gets dark”/ said Seetha / “OK Kanmani” said Rama / and went into the forest“

“Future is no longer the past” – New poems by Gregory Hart

Published by: Orient Poetry International, 2015

Price: Rs.699/-

References:

1. “A manifesto for Dual Merge poetry” by Ceslaw Krapunski. Translated from Polish by Richard Portman. Published in ‘London New Poetics Magazine’ Vol XXII Nov. 2013 issue

2. On the aesthetics of poetry : T.S.Pound, 1953, Andrew Johnson& Sons Publishers

3. “Not a drop of laughter – A criticism of Dual Merge poetry” by John Sturridge. Published in ‘New Age Poetry and Poetics’ Oct 2014 issue

4. Language in Space and Time: John Sheldon, 2002, Knorr & Sons Publishers

Advertisements

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.