இருத்தலியத்தின் கடைசி மூச்சு – மித்யா

மித்யா

பிலிப் லீ மார்டே என்பவர் எழுதி இயக்கிய ‘Still Waiting for Godot?’ என்ற பிரெஞ்சு நாடகம் இப்பொழுது ஐரோப்பிய நாடக உலகை உலுக்கியுள்ளது. இந்த நாடகம் பல சர்ச்சைகளை எழுப்பி ஐரோப்பிய நாடக உலகத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. ஒருசாரார் இந்த நாடகத்தை ரொம்பவும் சுமாரான நாடகம் என்று விமர்சித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இதை நாடகம் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

“This is the most pretentious drama that I have seen in my whole life and believe me, I have seen a lot of dramas in my life. In fact I would say that calling monstrosity a drama is giving more dignity than it deserves. I totally reject this concept and refuse to call this work as drama. Every art needs artifice but artifice alone cannot be art”1
என்று ழீன் பால் பாஸ்டர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை பலர் ஆமோதித்து தங்கள் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது என்று எழுதியுள்ளனர். இதற்கு நேர்மாறாக இன்னொரு கட்சி இருக்கிறது. அவர்கள் இதை மிக முக்கியமான ஒரு நாடகமாகக் கருதுகிறார்கள். சோர்ந்து போயிருக்கும் நாடக உலகத்துக்கு புத்துயிர் கொடுத்த நாடகமாக இதைக் கொண்டாடுகிறார்கள்.

ஐரோப்பிய கலைச்சூழலை இரண்டாகப் பிரிக்கும் இந்த நாடகத்தின் ‘கதை’ இதுதான்- திரை விலகியவுடன் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் காட்சி நமக்கு தெரிகிறது. அவள் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நமக்கு தெரியாதபடி அந்த பெண்ணுக்குப் பின்னால் ஒரு பச்சைத் திரை இருக்கிறது. அந்தப் பெண் ரோடினின் புகழ்பெற்ற சிற்பம் போல் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறாள். அவள் தன் இடது பக்கம் திரும்பி யார் வரவையோ எதிர்ப்பார்ப்பவள் போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அசையாமல் அதே போஸில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரம் கழித்து மெதுவாக எழுந்து பார்வையாளர்கள் பக்கம் திரும்பி அவர்களை நோக்கி கை நீட்டி ஏதோ பேச ஆரம்பிக்கும்போது திரை விழுகிறது.

முதல் முறை இந்த நாடகம் நடத்தப்பட்டபோது பலர் பொறுமையாக கால் மணி நேரம் காத்திருந்தபிறகு சப்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அரை மணி நேரம் கழித்து பலர் வெளியேறினார்கள். நாடகம் முடியும்பொழுது நான்கு பேர்தான் அந்த பிரம்மாண்டமான அரங்கில் இருந்தார்கள். அடுத்த நாள் பிரான்ஸின் முக்கியமான பத்திரிகைகள் இந்த நாடகத்தின் விமர்சனத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தன. “பரிட்சார்த்த முயற்சிகள் பிரான்சின் ரத்தத்தில் ஊறியவை. உலகத்தில் உள்ள எந்த தேசத்தை விடவும் பிரான்ஸ் நாட்டில்தான் சோதனை முயற்சிகளுக்கு மரியாதை அதிகம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம் சோதனை முயற்சிகள் இப்பொழுது நகைப்புக்குரியதாக இருக்கின்றன. இந்த நாடகத்தை வேறு நகரங்களுக்கு நாம் கொண்டு சென்றால் அவர்கள் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பது நிச்சயம். இது போன்ற முயற்சிகள் இங்கு தேவையா?”

என்று ‘லே மோன்டே’ என்ற பத்திரிக்கையின் நிருபர் விமர்சித்திருந்தார். “பிரான்ஸ் நாட்டுக்கு தீரா களங்கம் இந்த நாடகம்” என்ற தொனியில் பல பத்திரிகைகள் எழுதின. இரண்டு நாட்களிலேயே இந்த நாடகத்தை அரங்கை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தபொழுது எடுமொன்டு-டீ-மாரியாக் எழுதிய விமர்சனம் இந்த நாடகத்தின் தலையெழுத்தை மாற்றியது.

பிரான்ஸ் நாட்டின் மிக சிறந்த ‘கல்சுரல் கிரிடிக்’ என்று அறியப்படும் எடுமொன்டு-டீ-மாரியாக் ஒரு தத்துவ பேராசிரியர். அவர் இந்த நாடகத்தை தத்துவ நோக்கில் அணுகினார்.

“This is existentialism’s last stand, the last breath, the last gasp before it is forever buried. The drama deals with extraordinary precision about the ordinariness of life combining spirituality, absurdity and existentialism in a very original manner. The composite philosophy advocated by the author makes us question our own worth in this universe. As the drama unfolds, nothing unfolds on the stage but slowly we start watching our own selves. Time does not pass in this drama leading us to question the very concept of time and the mind with a scientific temper maps time to the equations of Einstein which proved that time was not a constant flowing object but rather which morphed itself based on the speed at which the subject travelled. Constantly questioning the concept of time and making us question ourselves, the drama raises multiple existentialist questions within ourselves. This drama breaks all our known notion of drama and transcends the genre gloriously. At last France has something to celebrate”,

என்றார் அவர்.

இது பிரசுரமானவுடன் நாடகத்தின் புகழ் வெகுவாக உயர்ந்தது. நாடகத்திற்கு டிக்கெட் கிடைப்பது கடினமானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முதன்மையான பெண்ணியவாதியான ‘சொப்ஹி-டி-மெல்லோ’ எழுதிய விமர்சனம் நாடகத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவர் எழுதியதில் ஒரு பகுதி:

“பெண் என்பவள் எப்பொழுதும் எதற்காகவோ காத்துக் கொண்டிருக்கிறாள். இந்த நாடகத்தின் பெண்ணும் அப்படியே. யார் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்? நியாயத்தின் வரவை. பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தும் ஒரு காலத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.கடைசியில் அவள் எழுந்து உங்களைப் பார்த்து கையை நீட்டுவது உங்களை குற்றம் சாட்டத்தான். நீங்கள் இன்னும் பெண்களுக்கு விடுதலை அளிக்கவில்லை. இன்னும் அவளை அடிமையாகவே பார்க்கிறீர்கள். அவள் பின்னால் ஒரு திரை இருந்ததைப் பார்த்தீர்களா? அங்கு ஓர் இயற்கைக் காட்சியை ஏன் வைக்கவில்லை இயக்குனர்? ஏனென்றால் எல்லா இடங்களிலும் பெண்கள் இப்படிதான் நடத்தப்படுகிறார்கள். அதைச் சுட்டிக்காட்டதான் அவர் பின்னால் ஒரு திரையை வைத்திருக்கிறார். இந்த நாடகம் ஆண்களுக்கு ஒரு சவுக்கடி”

இப்பொழுதெல்லாம் நாடகத்திற்கு டிக்கெட் ஒரு மாதம் முன்பே வாங்க வேண்டும். அரங்கம் நிரம்பி வழிகிறது. இன்னும் அங்கு இரண்டு கட்சிகளுக்கு இடையே சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாரிஸ் சென்றால் தவறாமல் இந்த நாடகத்தைப் பாருங்கள், நீங்கள் எந்த கட்சி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.