
கடிகாரத்தின் முன்
ஒரு கிடா வெட்டலாம்
தண்டவாளதின் மேல்
தேங்காய் உடைக்கலாம்
கைகாட்டிக்கு
சேவலின் இரத்தம் பூசலாம்.
ஸ்டேஷன் மாஸ்டருக்கு
பாலாபிஷேகமும்
முன்பதிவு செய்யும்
குமாஸ்தாவுக்கு
தங்கத்தில் ஒரு ரயில்பொம்மையும்
தர சத்தியம் செய்யலாம்.
அடுத்த ரயில்
எப்ப வரும் என்பதை
யாராவது சொல்வதானால்.
000
அருண் கொலாட்கரின் Vows என்ற கவிதை தமிழாக்கம்
ஒளிப்பட உதவி- https://thesolitarywritersblog.files.wordpress.com