இலையுதிர்காலப் பிரமாணம்

நகுல்வசன்

மஞ்சள் திரளாக
கருவாலியிலிருந்து உயர்ந்தெழும்பிய
பறவைகள்
இலைகளாக கீழிறங்கி
சாலையைக் கடந்து சென்றதால்
புலப்படா கணமொன்றில்
என்னுள்ளெங்கோ
அமிழ்ந்தழிந்திருக்க வேண்டும்
காற்றின் தடம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.