இரண்டு
வெவ்வேறு நிற கூடையினால்
வகைப்படுத்தி
தெரு முழுதும்
ட்ரைசைக்கிளை
தள்ளிக்கொண்டு வந்து
பின் நிரம்பியதும்
பிரித்து அடுக்கிவிட்டு
புங்கைமரத்தின் கீழிருக்கும்
அடி பம்பின் நீரில்
கைகளையும் முகத்தையும் கழுவிய பின்
தெருவின் திருப்பத்தில்
இருக்கும்
நாவல்மர நிழலில்
முருங்கைக்காய் சாம்பாரின்
சுவை பற்றிய பேச்சுடன்
புன்னகைத்தபடியே பார்க்கும்
எங்கள் தெருவின் குப்பைகளை ஒன்று சேகரிக்கும்
செண்பகவள்ளி அக்காவினை
இன்றைப்போலவே
ஒவ்வொரு நாளும்
மிகச் சாதாரணமாகக்
கடக்கிறேன்
simple and meaningful. thanks.