எஸ். சுரேஷ்

கல் நந்தியல்ல அதிகாரநந்தி

எஸ். சுரேஷ்

சிவனுக்கு முன் வந்து உட்கார்ந்து கொண்ட நந்தி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறது.

“சற்றே விலகி நில்லும் அய்யா,
தரிஷனம் மறைக்குது”
என்று கதறிக்கொண்டிருக்கிறான் நந்தன்.

கவியின் கண் 8 – ‘கையிருப்பில் இல்லாத காரணத்தால்’

– எஸ். சுரேஷ்-

MUSEUM –  Wislawa Szymborska

Here are plates with no appetite.
And wedding rings, but the requited love
has been gone now for some three hundred years.

Here’s a fan–where is the maiden’s blush?
Here are swords–where is the ire?
Nor will the lute sound at the twilight hour. (more…)

கவியின்கண் 7 – “கடுவிசை உருமின்”

– எஸ். சுரேஷ்-

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ.
– குறுந்தொகை, 158 (more…)

பூனைகள் மீது எங்களுக்கு யாதொரு வன்மமும் இல்லை

 
பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறேன்,
பூனை என் மடியில் ஏறித் தூங்க ஆரம்பிக்கிறது,
என் வேட்டியை இரு கைகளாலும் பிடித்து உதறுகிறேன்.
 
மேலே பறந்த பூனை, 
பீதியுடன் கண் விழித்து உடம்பைத் திருப்பி, 
கால்களை அகட்டிக் கொண்டு தரை இறங்குகிறது.
 
ஆக்ரோஷமாக என்னைப் பார்த்து, 
“மியாஆவ்வ்வ்” என்று கத்திவிட்டு,
மடியில் ஏறி மறுபடியும் தூங்க ஆரம்பிக்கிறது.
 
பொழுது நகராத மதியவேளை-
 
அணைக்க மறந்துவிட்டுத் தூங்குகிறார்கள்
மத்திய வர்க்க மாமிகள்,
 
சீரியலில் கதறிக் கொண்டிருக்கும் பெண்ணை
உற்றுப் பார்க்கிறது பூனை.

எமக்குத் தொழில் கவிதை

“எது நல்ல கவிதை என்று கேட்கிறார் கிரி
கோட்பாடு ஒன்றைச் சொல்கிறார் பாஸ்கர்
கோட்பாட்டை மீறியதுதான் கவிதை என்கிறார் ஸ்ரீதர்
நீ என்ன சொல்கிறாய்?”
என்று என் வீட்டு கிளியிடம் கேட்டேன்
 
‘மியாவ்’ 
 
“அதுவும் சரிதான். எங்கே நீ ஒரு கவிதை சொல்”
 
“மியாஆவ்வ்வ், 
மியாவ்வ்வ், 
மியாஆவ்” 

 ரைட்டு விடு.