– பீட்டர் பொங்கல் –
Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.
பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
முதல் நூல்
நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.
முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.
“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம். (more…)