மொழியாக்கம்

வழித்தடங்கள்

(ஆடன் மொழிபெயர்த்த நூலின் சில மேற்கோள்கள்)

oOo

மிக நீண்ட பயணம்
உள்நோக்கிப் பயணித்தல்.
தன் விதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன்
தன் தேடலைத் நோக்கிப் பயணிப்பவன்,
தன் இருப்பின் ஆதாரத்தைத் தேடிச் செல்கிறான்.

oOo

ஒரு புள்ளியில் எல்லாமே எளிதாகிவிடும்; இதுவா அதுவா என்ற கேள்விகளெல்லாம் அப்போது இருக்காது. ஏனென்றால், திரும்பிப் பார்த்தால் நீ பணயம் வைத்தவை உனக்கு இல்லாது போகும். வாழ்வின் திரும்ப முடியாத புள்ளி.

oOo

நம் விதியின் சட்டகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள நமக்கு உரிமையில்லை. ஆனால், அதனுள் நாம் இடுவதெல்லாம் நமதே.

oOo

உன் ஆசைகளை கவனிக்கச் சொல்லி நீ மன்றாடுவது கடவுளிடம் என்பதற்காக, மனித மிருகமான உன் தாபங்கள் பிரார்த்தனை ஆகாது.

oOo

நமக்கென்று உள்ள தெய்வத்தின்பால் நாம் நம்பிக்கை இழந்த அன்றே மரிப்பதில்லை கடவுள். ஆனால் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் உள்ள அதிசயம், நிலையான அந்த ஆதாரப் பிரகாசம், அது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்வைப் புதுப்பித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், அந்த நாளே நாம் செத்தோம்.

oOo

மரணத்தைத் தேடிப் போகாதே. மரணம் எப்படியும் உன்னைக் கண்டடையும். ஆனால், வரப்போகும் மரணம் நிறைவாக இருக்குமாறு உன் பாதையை நீ தேடிக் கொள்.

oOo

கண்ணியமாக இறப்போமானால் குறைந்தபட்சம் கண்ணியமாவது பிழைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

oOo

வாழ்வையும் மனிதர்களையும்
இறைவன் நேசிப்பது போல் நேசிக்க வேண்டும் –
அவர்களது எண்ணற்ற சாத்தியங்களுக்காக,
அவனைப் போல் காத்திருக்க வேண்டும்,
அவனைப் போல் நீதி வழங்க வேண்டும் –
எந்தத் தீர்ப்பும் எழுதாமல்,
கட்டளை கிடைத்ததும் கீழ்ப்படியவும்
கணப்போதும் திரும்பிப் பாராது செல்லவும்.

oOo

ஒரு தேனீயைப் போல், அமிழ்திலிருந்து விஷத்தைப் பிரித்தெடுத்துக் கொள்கிறோம், நம்மைக் காத்துக் கொள்ள – தன் கொடுக்கைப் பயன்படுத்தும்போது அந்தத் தேனீ என்னவாகும் என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும்.

oOo oOo

தமிழாக்கம் :  பீட்டர் பொங்கல்

தொடர்புடைய பதிவு : ஆடனின் ரகசிய வாழ்க்கை

ஆடனின் ரகசிய வாழ்க்கை – எட்வார்ட் மென்டல்ஸன்

நான் எதிர்பாராமல் அறிய வந்த விஷயம் இது. நானோ வேறு பிறரோ அறிந்திருப்பதைவிட மிக அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.

விருந்தொன்றில் ஒரு முறை நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். 1950களில் ஆடன் ந்யூ யார்க்கில் வழிபட்டு வந்த செயின்ட் மார்க்ஸ் இன் த பவரி எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் வழிபாடுகள் செய்துவந்த பெண் அவர். அதன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒரு மூதாட்டி கடுமையான அச்சம் காரணமாக உறக்கம் வராமல் அவதிப்படுவதாக ஆடனுக்குத் தெரிய வந்தது என்றார் அந்தப் பெண். எனவே ஆடன் ஒரு கம்பளியை எடுத்துச் சென்று, அவரது அபார்ட்மெண்ட் கதவுக்கு வெளியே இருந்த ஹால்வேயில் உறங்குவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அந்த மூதாட்டியின் அச்சம் நீங்கும்வரை ஆடன் அங்குதான் உறங்கினார். (more…)

உண்மைகள், ஆனால் வெட்கங்கெட்ட பொய்கள்

பீட்டர் பொங்கல் –

Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.

பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் நூல்

நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.

முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.

“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான  சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம். (more…)

திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)

மானுடர்க்கு அழகால் மேன்மையுண்டா? : வடிவும் உணர்ச்சியும் – இரு உந்துவிசைகள்

புனைவுலகைப் பேசும் தளத்தில் இக்கட்டுரையில் உள்ள சிந்தனைகளுக்கு நேரடி பொருத்தம் உண்டா என்ற கேள்வி எழலாம். படைப்பில் உணர்ச்சிக்குச் சமமான இடம் வடிவத்துக்கும் உண்டு, கற்பனைக்கு உள்ள முக்கியத்துவம் யதார்த்த உண்மைக்கும் உண்டு, மன நிறைவும் நீதியுணர்வும் வெவ்வேறல்ல. அழகுணர்வில் இவையனைத்தும் சீர்மையடைகின்றன என்கிறார் ஷில்லர். இவ்விரு விசைகளும் பிளவுபட்ட நிலையின் சீரழிவை விவரித்து, அழகணுபவத்தில் சாத்தியமாகக்கூடிய மேன்மையை முன்னிறுத்துகிறதுஜான் ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய இக்கட்டுரை. இதன் முற்பகுதிச் சுருக்கமும் பிற்பகுதியின் சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கமும் இனி.
 
முற்பகுதிச் சுருக்கம்: சிந்தனையாளர் ஷில்லர் மனித மனதை இரு பெரும் உந்துவிசைகள் பொருதும் களமாகக் கண்டார். உணர்ச்சி விசை நிகழ் கணத்துக்கு உரியது, உடனடி சுக நாட்டம் கொண்டது. வடிவ விசை காலக்கணக்கில் வடிவ நாட்டம் கொண்டது, அருவச் சிந்தனையும் தர்க்க ஒழுங்கும் தேடுவது. அது தன் அனுபவ புரிதல்களை விட்டுச் செல்லவும் பொது கொள்கைகளை நிறுவவும் முனைகிறது. நீதியுணர்வின் பிறப்பிடம் அது. இவ்விரண்டு உந்துசக்திகளும் சமநிலையடைதலே மனித வாழ்வுக்கு அமைதியை அளிக்கிறது. அழகுணர்ச்சி இவ்விசைகளை, நம்மைப் புரிந்துகொள்ள ஒரு வழியாகிறது. 

(more…)