பதாகை 4 ஜனவரி 2015

நேர்முகங்கள்

எல்லாப் புனைவுகளையுமே ‘எழுதிப் பார்க்கும் முயற்சிகள்’ என்று கருதியபடிதான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். சிறுகதையின் வடிவம், அதன் சூட்சுமம் எனக்கு மிகவும் உகப்பானது; குறுகத் தரித்த குறள் போல மிகப்பெரிய செய்திகளையும்கூடக் கோட்டுச்சித்திரங்களாகக் காட்டிக்கொண்டு போவது சிறுகதை.

புத்தக கண்காட்சி – எம். ஏ. சுசீலாவுடன் ஒரு நேர்முகம் 

கதை சொல்லலின் நீட்சி, மற்றும் நான்லீனியர் உத்தி, மெட்டா பிக்சன் புனைவு உத்தி, அது மாத்திரமின்றி, சினிமாக்களிலே அதிகம் பாவிக்கப்படும் உத்திகளையும் பயன்படுத்தி கவிதைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். எனது பிரதிகள் ”கவிதை” என அர்த்தப்பட்ட நவீன நிலவரங்களை கொண்டு அமையப்பெற்றவையல்ல.

றியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம் 

அருண் கொலாட்கர்

ஆங்கில நாட்டம் கொண்ட இந்தியாவில் பதிப்பிக்கப்படும் கவிதைகள் பெறும் வரவேற்பின் தரம் நோக்கும்போது, ஜெஜூரி\ அசாதாரண உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது என்று சொல்ல வேண்டும்; குறுகிய இடைவெளியில் அது இரு பதிப்புகள் கண்டது; அதன்பின், சற்றே நீண்ட இடைவெளியில் இன்னும் இரு பதிப்புகள்.

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

பூஜை செய்வதற்காக
சட்டையைக் கழற்றிவிட்டு
உள்ளே செல்ல வேண்டுமா,
யார், நானா?

அருண் கொலாட்கர்- தமிழாக்க கவிதைகள் இரண்டு,  நம்பி கிருஷ்ணன் 

கவிதைகள்

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

அப்பாவிற்கான கனவுகள், ஸ்ரீதர் நாராயணன் 

பட்டுப் புடவை கட்டிய மூதாட்டி ஒருவர் ஏதோ வாங்க வந்தார் ஏதோ கல்யாணத்திற்குச் செல்கிறார் போல் “எந்த சாக்லேட் வேணும்?” என்று சிறுவர்களைக் கேட்டார் இருவரும் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு தந்தையை பார்த்தனர்

அஜ்ஜி மாதிரி, சிகந்தர்வாசி 

← Back

Thank you for your response. ✨

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.