சிறந்த சிறுகதைகள் பலவும் உள்ளடக்கத்தில் அல்லது வடிவத்தில் ஏதோ ஓர் ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ அளிப்பவை. பதாகை அத்தகைய சிறுகதைகளை நோக்கிச் செல்லும் பயணத்தில் துணை நிற்க முனைகிறது.
நீராம்பல், உடைநீர் ஓசை வரிசையில் ஸ்ரீதர் நாராயணனின் தரகு இன்னுமொரு சிறந்த சிறுகதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கதையின் திசை என்ன என்ற ஆவல் துவக்கம் முதல் முடிவு வரை தொடர்கிறது.
சென்ற வாரம் ஹரன் பிரசன்னா எழுதிய யாரோ ஒருவன் ஆச்சரியமான முடிவைக் கொண்டிருந்தது. இவ்வாரம் அவர் எழுதியுள்ள சுவை, சிந்திக்க வைக்கும் கதை, சிறந்த ஒரு சிறுகதையாகவும் அமைந்திருக்கிறது.
பதாகையில் முதன்முறையாக சித்ரன் ரகுநாதன் டுகாட்டி என்ற சிறுகதையை எழுதியுள்ளார். வெகுஜன வாசிப்புக்கான இந்தச் சிறுகதையின் முடிவு ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழின் முன்னணி படைப்பாளிகளைப் போலவே பல பயணங்கள் மேற்கொண்டு அகவிரிவும் ஆன்மிக விழிப்பும் அடையக்கூடிய சாத்தியங்களின் முன் நின்றவர் சிகந்தர்வாசி. “டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம்“, “நாம்பல்லிச் சம்பவம்” ஆகியவற்றைத் தொடர்ந்து வேறொரு வகை அகவிரிவைக் கோரிய “ஹௌடாச் சம்பவம்” இங்கே.
இந்த இதழில் இரு மொழிபெயர்ப்பு கவிதைகள் இடம் பெறுகின்றன. அருண் கோலாட்கரின் கவிதையை காஸ்மிக் தூசியும், அடில் ஜூஸ்ஸாவாலாவின் கவிதையைச் செந்தில்நாதனும் மொழிபெயர்த்துள்ளனர்- கிழவியில் கவித்துவ கற்பனை வெளிப்படுகிறது என்றால், மொழிபெயர்க்க கடினமான கவிதையைத தமிழாக்கம் செய்யும் முயற்சி உயர்ந்தெழுதல்.
ஸ்ரீதர் நாராயணன் சந்தோஷ ஊற்றுகள் என்ற கவிதை எழுதியுள்ளார்- இந்தக் கவிதைகள் மகளதிகாரத்தின் நெகிழ்ச்சியான வேறொரு முகம். எஸ். சுரேஷ் எழுதியுள்ள ஐஸ் க்ரீம் கவிதையும் மகளதிகாரத்தின் வேறொரு முகம்தான், நெகிழ்ச்சி கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தக் கவிதையையும் படித்துப் பாருங்கள்.
பதாகையில் சமகால தமிழ் இலக்கியம் குறித்த விமரிசனமோ மதிப்பீடோ எதையும் காண்பது அரிதாக இருக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதைப் போக்கும் வகையில் அஜய், அரவிந்தனின் நாவல், பயணம், குறித்து விரிவான மதிப்பீடு எழுதியுள்ளார்.
இறுதியாக, வண்ணக்கழுத்து. இந்த வாரம் வாசிக்கத் தவறாதீர்கள். குழந்தைகளுக்கான கதைகள் சாக்லேட்டும் ஐஸ் கிரீமுமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை, வலி நிறைந்த வாழ்வை உணர்த்துவதாகவும் இருக்கலாம். வண்ணக்கழுத்துக்கு திசைகளைப் பழக்கும் பயிற்சி ஓர் அழகிய படிமமாகவே இவ்வாரம் உருவம் பெற்றுள்ளது.
பிற தளங்களில் பதாகை தோழமைகள்-
ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம் “ஷமிதாப் திரைப்படத்தில் 80களுக்குப் பின் பிறந்தவர்களுக்கான இசையைத் தந்திருக்கிறார் இளையராஜா, இநதக் கட்டுரையும் அவர்களுக்காக,” என்கிறார் எஸ். சுரேஷ்
-
டோபா டேக் சிங்- மண்டோ "நான் படித்த மண்டோவின் முதல் கதை - அவர் கடைசியாக எழுதிய கதையும் கூட", என்கிறார் மொழிபெயர்ப்பாளர் செந்தில் நாதன்.
-
மொட்டு விரியும் சத்தம்- லங்கேஷ், நூல் அறிமுகம் எஸ் அனுகிரகா மதிப்பீடு- "ஆணின் மனதிலிருந்து ஒரு பெண் குரல். லங்கேஷ் கவிதைகள் உலகில் நுழைந்து வருவது, ஒரு காலப் பயணம் போல இருந்தது"
-
“எத்தனை விதங்களில் மனம் செயல்பட்டாலும் அத்தனையையும் தாண்டி ஒரு புது ஆழத்தைக் காட்டி நிற்கும் படைப்பு, இதுவரை தமிழில் பேசப்படாத அழகியலை வெளிப்படுத்தும் நாவல்”.- கால்பட்டா நாராயணனின் நாவல் குறித்து ரா. கிரிதரன்- சுமித்ரா– அந்தம் இல் மனம்
-
பல்லாண்டு காலம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி எழுதியிருப்பதை நம்பி ஐபிஎம் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்வதாயிருந்தால், அதன் லாப நஷ்டத்திற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் - பாஸ்டன் பாலா ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா? -
தொடர்பு கொள்ள-