சிகந்தர்வாசி

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 1

– சிகந்தர்வாசி – 

நான் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பார்க்க சிரிப்பு வருகிறது, இல்லையா? பூட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒன்றில் இந்தக் கருவி இருந்ததை இன்றுதான் கண்டுபிடித்தோம். இதை அணிந்துகொண்டால் நம் கவனம் அதிகரிக்குமாம். ஆக்சிஜன் என்ற சமாச்சாரத்தை ஒரு குழாய் வழியாக மூக்கில் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இதை அணிந்திருப்பவனது காது அடைத்துக் கொள்கிறது. இவ்வாறாக உலகிலிருந்து துண்டிக்கபட்ட நிலையில் இந்த முகக்கவசத்தில் இருக்கும் இரு சிறு கீறல்களின் வழியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இப்போது இதற்கென்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும், என் கவனத்தைக் குவித்து நான் அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறேன்? ஏன் எனக்கு ஒரு பதற்றமாக இருக்கிறது? ஏன் என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது? என் பதற்றத்துக்குக் காரணம் என்ன? இந்த முகக்கவசம் என் பதற்றத்தைக் குறைக்குமா? இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் எங்கள் வரலாற்றைக் கொஞ்சம் அறிமுகம் செய்ய வேண்டும். (more…)

அவனுள் இருக்கின்றன ஆன்மாக்கள்…

– சிகந்தர்வாசி – 

ரேவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பாதாதிகேசம் பளபளத்தான் அவன் – கருநிற ஷூக்கள் அணியும் வழக்கம் எப்போதும் இருந்தது. தன் மேலங்கியை அடிக்கடி பாலிஷ் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதுவும் வெயில் ஒளியில் மினுங்கியது. ரேவனை இப்போது காண நேரிடும் எவரும் அவனை ஒரு நீதிபதியென்றோ பாதிரியாரென்றோதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவனோ சட்டம் படிக்கும் வாய்ப்பும் சர்ச்சில் சேரும் வாய்ப்பும் கிடைத்திருந்தபோதும் அவ்விரு பாதைகளையும் நிராகரித்திருந்தான். (more…)

உல்லு

– சிகந்தர்வாசி – 

“டேபிளில் முட்டிக் மோதிக் கொண்டு ஒருவன் சிட்டி லைட் ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்தான்,” என்று சொல்லிக் கொண்டே அக்பர் ஹோட்டலில் இருந்த சூர்யாவின் முன் உட்கார்ந்தான் வெங்கட். “இரு டம்ப்ளர்கள் உருண்டு விழுந்து நொறுங்கின. தரையெல்லாம் தண்ணீர். அதிர்ச்சியில் ஒரு பெரியவர் தான் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டிவிட்டார். ஓடி வந்தவன் நேராக என் மீது வந்து மோதினான். நாங்கள் இருவரும் கீழே விழுந்து உருண்டோம். என்னை அழுத்திக் கொண்டிருந்தவன் எழுந்திருக்கப் பார்த்தான், நான் விடவில்லை. ஒரு ஆள் வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும்வரை நான் என் பிடியை விடவில்லை. அவன் யார் தெரியமா? யூகிக்க முடிகிறதா பாரேன். இழுத்துக் கொண்டு போனவன் மஃப்டியிலிருந்த போலீஸ்காரன். என்னுடன் மோதியவன் ஒரு தாதா. யார் என்று சொல்ல முடியவில்லையா? ஹஹா! நான் யாரைப் பிடித்துக் கொடுத்தேன் என்று உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது – ஜகாங்கீர்கான்! ஹஹா!” (more…)