– ஸ்ரீதர் நாராயணன் –
ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?
எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.
எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!
மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.
இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா? (more…)
