தவறாத குறி

 – எஸ். சுரேஷ் –

 

 

உயரே ஆகாயத்திலிருந்து பருந்து
தண்ணீரில் இருக்கும் அந்த மீனை பார்த்தது
தன் குருநாதர் சொல்லிக்கொடுத்தபடி மீனின்
கண்ணை பார்த்தது

விரிந்திருந்த தன் சிறகை மூடிக்கொண்டு
உடம்பு ஒரு வில் போல் காற்றை கிழிக்க
மீனை நோக்கி இறங்கியது

அதன் குறி அந்த மீன், அதன் கண்ணை,
அதை மட்டும் பார்த்துக்கொண்டு
குறி தவறாமல் இறங்கியது

மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்
மீனின் கண்

அதற்கு தண்ணீரில் ஆடும் தாமரை
கண்ணில் படவில்லை
கரையோரம் இருக்கும் மாமரமும்
கண்ணில் படவில்லை
அதே மீனைப் பார்த்து மரக்கிளையிலிருந்து
புறப்பட்ட மீன்கொத்தி பறவையும்
கண்ணில் படவில்லை

 

புகைப்பட உதவி : விக்கிபீடியா

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.