நாங்கள் வந்து பார்த்ததிலிருந்து,
கனவுக்குள்ளே அதிக நேரம் காத்திருக்கிறார்
மிகத் தொலைவுக்கு அப்பால்
மீண்டும் அந்த தெரு தொடங்கலாம்
கீழே தண்ணீர்
வேறு எதுவும் அங்கில்லை
கூப்பிட்டேன்
கனவிலிருந்து திரும்பி வருகிறார்.
கனவில் வந்தவர்,
உங்கள் அனைத்துக் கனவிலும்
தானே நடிக்க விரும்புவதாகவும்
அனுமதி தரும்படியும் கேட்டுக்கொண்டார்
பிறகு அவரோடு பேச இருக்கிறேன்.
கனவில் நடிக்க ஆள் தேவை.
ஒரேயொரு நிபந்தனை
இதற்கு முன் நடித்த கனவுகளில்
ஏதாவதொன்றை
நடித்துக் காட்ட வேண்டும்.
அதுவும், பெண்ணின் கனவு என்றால்
முன்னுரிமை வழங்கப்படும்.
நடுவர்களாக இருப்பவர்களை
விரைவில் அறிவிப்பேன்.
நடுவர்கள் தேவை.
One comment