– வேணுகோபால் தயாநிதி –
கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும் சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து மிதந்தலையும்.
மூப்படைந்து துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும்.
உடையாத குமிழியொன்று
உயர்ந்தெழுந்து நிறமடர்ந்து
வானவில்லாய் விரிவடையும்.
மதிய வெய்யில்
மரத்தடியில் அம்முக்குட்டி
ஊதுகிறாள் விளையாட்டாய்.
அவள் குழலில்
தோன்றி வளர்ந்து
விரிந்து மறையும்
எண்ணற்ற பிரபஞ்சம்.
ஒளிப்பட உதவி- Brocken Inaglory (Own work) [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html), CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/) or CC BY-SA 2.5-2.0-1.0 (http://creativecommons.org/licenses/by-sa/2.5-2.0-1.0)%5D, via Wikimedia Commons