–தமிழாக்கம்: காஸ்மிக் தூசி–
சைதன்யா
தொலைவில்
தெரிந்தபோது
புராணிகர் கூட்டம் ஒன்று
மலைச்சரிவில்
மேய்வதை நிறுத்திவிட்டு
நிமிர்ந்து பார்த்தது.
சைதன்யா
அவ்வழியே சென்றபோது
மலைகள்
அசையாதிருந்தன.
சைதன்யா
பார்வையில் இருந்து
மறைந்தபோது
கழுத்து மணி
குலுங்கி ஒலித்தது.
பிறகு புராணிகர் கூட்டம்
மேய்ச்சலுக்குத் திரும்பியது.
000
ஒளிப்பட உதவி – https://alexnberra.files.wordpress.com
