நித்ய சைதன்யா
கை மறதியாய் வைத்த
கனவொன்றிலிருந்து
கிளம்பிச்செல்கின்றன
பருவத்தின் வேர்கள்
துய்க்கும் ஆசை உந்த
நிலம் பிளக்கும்
சிற்றிலையின் பசுமையில்
வந்தமர்கிறது
மணற்கடிகையின் ஒருதுகள்
வண்ணம் மிகும் இதழ்தழுவி
மலர்ந்திருக்கிறது
வசந்தத்தின் ஓர்நாள்
பொன்னொளியில் சுடர்ந்து
இருள்கலைய புலர்கிறது
இச்சையின் காரிருள்
யாருமற்றவராகி
யாவரிடமும் இருக்கிறது
கை மறதியில் வைத்த கனவின் இரவு