Andy Weir அளித்த பேட்டி ஒன்றின் மூலமாகத்தான் The Egg என்ற கதை பற்றி அறிந்துகொண்டேன். பிறகு சென்ற வாரம் அதைத் தேடிப்படித்தபோது ஒரு பெரிய ஐடியாவை (அல்லது தத்துவத்தை) மிகவும் கச்சிதமாக முன்வைப்பதாக தோன்றியது. ‘இயற்கையின் முன் நாமெல்லாம் சிறு துளி’, ‘ஏன் ஒருவருக்கொருவர் இத்தனை வெறுப்பு?’, ‘பிரபஞ்சத்தின் அர்த்தம்’, ‘காலச்சக்கரத்தில் நடப்பதே திரும்பத் திரும்ப நடப்பது’ போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமான விஷயங்கள். எனது இக்கதையிலும் வேறு வகையில் அவற்றை மறைமுகமாக பேசியிருந்தேன் – வால் விழுங்கி நாகம்
மறுபிறவி போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், காலம் முன்பின்னே பிறப்பெடுப்பது என்பது ‘மறுபிறவி’ தலைப்பில் எழுப்பப்படும் சில சந்தேகங்களுக்கு லாஜிக்கலாக பதில் அளித்துவிடுகிறது.
இதெல்லாம் எனக்கு கதை பிடித்ததற்கான சில காரணங்கள். ஆனால் மொழிபெயர்த்தது ஏன் என்று இப்போது யோசித்தால், இது சிறிய கதையாக, மொழிபெயர்க்க அதிக நேரம் பிடிக்காமல் இருந்ததும்கூட முக்கிய காரணமாக இருக்கலாம் 🙂
தமிழாக்கத்தை இங்கு வாசிக்கலாம்- முட்டை