செல்பி எடுத்துகொண்டிருந்த எங்களை பார்த்துவிட்டு
லங்கூர் குரங்கொன்று மரத்திலிருந்து கீழிறங்கி
“என்னையும் ஒரு செல்பி எடுங்கள்” என்றது
நான், மனைவி மற்றும் லங்கூர் உள்ள ஒரு செல்பி எடுத்தேன்
செல்பியை பார்த்துவிட்டு
“ஹ்ம்ம். இதுக்குதான் தனியா எடுத்துக்கணும்னு சொல்றது”
என்று பெருமூச்சு விட்டுவிட்டு
மரத்தில் மறுபடியும் ஏறியது