எஸ்.சுரேஷ்

'குடூர் குடூர்' என்ற ஆண் புறா பெண் புறாவை பார்த்து.
பெண் புறா ஆண் புறா பக்கம் திரும்பவேயில்லை.
'குடூர் குடூர் குடூர் குடூர் குடூர்' என்று மறுபடியும் ஆண் புறா அழைத்தது.
பெண் புறா பார்க்க மறுத்தது.
ஆண் புறா பறந்து பெண் புறா முன் கிளையில் உட்கார்ந்தது.
பெண் புறா தலையை திருப்பிக்கொண்டது.
"குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர்' என்று இடைவிடாது கூறியது.
பெண் புறா ஆண் புறா பக்கம் கழுத்தை திருப்பி 'குடூர்' என்று கூறிவிட்டு மறுபடியும் கழுத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்தது.
'குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் ' என்று மூச்சிரைக்க மேல் ஸ்தாயியில் ஆண் புறா கூவியது.
பெண் புறா இல்லை என்று கூறுவது போல் தலையை ஆட்டியது.
' குடூர் குடூர் குடூர்' என்று உரக்க கூவியது ஆண் புறா.
பெண் புறா கிளையை விட்டு கோபமாக பறந்து சென்றது.
ஆண் புறா அதை பின்தொடர்ந்தது.
...
ஒளிப்பட உதவி - Guardian Witness
Like this:
Like Loading...
Related