புள்ளிகள் மேவிய வளைய வடிவான
பச்சை வண்ண சீப்பி ஒன்றை
பார்த்தபடியே இருக்கிறார்.
முகம் என்னவோ உணர்ச்சி மிகுதியில்
விண்டுவிடுவது போல் தளும்பி நிற்கிறது
ஒரு குழந்தையின் மோகன சிரிப்பையோ
ஒரு பிரிவின் துயரையோ
உலர்ந்த சருகுகள் முறியும் ஓசையையோ
முனை மழுங்கிய சீப்பி கொண்டு
ஒருவரின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியையோ
அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
விழியகற்றி என்னைப்
நோக்கி திரும்பும்போது
அந்த சீப்பிப் பற்றிய எந்த தடயமுமற்ற
முற்றிலும் வேறொரு சங்கதி பற்றி
பேச்செடுக்க தயாராகிறேன்.