ஆதவன் தருவான் உடலுக்கு உறுதி – கே. ராஜாராம் கவிதை

கே. ராஜாராம்

நட்ட நடுப்பகலில் உச்சி வெயிலில் நடப்போர்க்கு
வட்டத் திகிரி தருவான் வைட்டமின் D – ஏ சி
கட்டடத்துள் வாழ்வதும் ஒரு வாழ்வா? இக்கால
கட்டத்தின் கட்டாயம் இதை உணர்வதே!

சீரகம் தரும் சூரியனை உபாசித்து
பேரகப் பெரு வெயிலில் நடவீர்! நடவீர்!
தாரக நாமம் உள்ளத்துக்கு உறுதி போல் -பகல்
தாரகைத் தலைவன் தருவான் உடலுக்கு உறுதியே!

அருள் ஒளி ஆதித்ய கிரணங்கள்- சத்துப்
பொருள் தரும் உடலின் வலிமைக்கே- அதுவே
இருள்சூழ் வாழ்வில் அகல் விளக்கென
மருள்மிகு மனத்துள் பாய்ந்திடுமே!

உடலின் உயிரே சூரிய வெளிச்சம- கீழ்க்
கடலில் உதிக்கும் இறை வெளிச்சம்- அது நம்
குடலுள் தூண்டும் சத்தின் பெருமையை- ஒரு
மடலில் பதித்தேன் மக்கள் நலனுக்கே!

2 comments

 1. இங்கே கிடைச்சுடும். அமெரிக்காபோன்ற வெளிநாடுகளில்? வெயிலையே
  அனுபவித்துப் ப்பார்க்காமல் வாழும் மனிதர்கள்.

 2. வெயில் தரும் அமுதத்தை
  அன்பின் உந்துதலில்
  அக்கறையோடு சித்தரைப்போலே
  எடுத்தியம்பும் இது
  பேரன்பு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.